நேபாளத் தேர்தல் : ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றி
காத்மாண்டு,மார்ச் 9- நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் மையவாதக் கட்சியாக காட்டிக்கொள்ளும் ராஷ்டிரிய சுதந்திர கட்சி (RSP) பெரும் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சி 2022 இல் ரவி லாமிச்சானே என்பவரால் துவங்கப் பட்டது. ராப் பாடகராக இருந்த பாலேந்திர ஷா பாலென் (35) 2022-இல் நடைபெற்ற காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேச்சை யாக போட்டியிட்டு வென்றார். இளம் தலைமுறையினரின் பெரும் ஆதரவு பெற்ற அவர் பின்னர் ஆர்எஸ்பி -இல் இணைந்தார். இவரே தற்போது அந்நாட் டின் அடுத்த பிரதமராகப் பதவியேற்க உள்ளார். 2025 செப்டம்பர் மாதம் ஜென்-இசட் இளைஞர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து கே.பி. சர்மா ஒலி தலைமை யிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு இடைக்கால தலைவராக அந்நாட் டின் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்க்கி நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. மார்ச் 5 அன்று நடைபெற்ற தேர்தலில் சுமார் 60% வாக்குகள் பதிவாகின. நேபாள பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 பேர் நேரடித் தேர்தல் மூலமும், 110 பேர் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை யிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமை வரையிலான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி நேரடி யாகத் தேர்தல் நடந்த 165 இடங்களில் 125 இடங்களை ஆர்எஸ்பி கைப்பற்றியுள்ளது. குறிப்பாக காத்மாண்டு பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து 15 தொகுதிகளிலும் முழுமையாக வெற்றி பெற்று ‘கிளீன் ஸ்வீப்’ செய்துள்ளது. விகிதாச்சார முறையிலும் சுமார் 50 சதவீத வாக்குகளைப் பெற்று, பல ஆண்டு களாக நேபாள அரசியலில் ஆதிக்கம் செலுத்திய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ஆர்எஸ்பி கட்சியே அதிக பெரும்பான்மை யுடன் முன்னிலையில் உள்ளது. நேபாள காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நேபாள காங்கிர ஸின் பிரதமர் வேட்பாளராகக் கருதப்பட்ட ககன் தாப்பா தனுஷா-4 தொகுதியில் ஆர்எஸ்பி வேட்பாளரிடம் தோல்விய டைந்தார். நேபாள காங்கிரஸின் மூத்த தலைவர்களான சேகர் கொய்ராலா, விம லேந்திர நிதி ஆகியோரும் தோல்விய டைந்தனர். நேபாளத்தின் பாரம்பரிய இடதுசாரிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நான்கு முறை பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி, ஜாப்பா-5 என்று தொகுதியில் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாலேந்திர ஷா விடம் வெற்றியை இழந்துள்ளார். அக்கட்சியின் பொதுச் செய லாளர் சங்கர் போக்ரேல், துணைத் தலை வர்கள் விஷ்ணு பவுடல், பிரித்வி சுப்பா குருங் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். துவங்கி 4 ஆண்டுகளே ஆன கட்சி யின் வெற்றியும் பாரம்பரியக் கட்சிகளின் தோல்வியும் சாதாரண நிகழ்வு இல்லை. மக்களின் நம்பிக்கையை இழந்ததும், புதிய தலைமுறை ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருப்பதுமே பாரம்பரிய அரசியல் கட்சிக ளின் பெரும் தோல்விக்கு காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2015 இல் அந்நாட்டில் ஏற்றுக்கொள் ளப்பட்ட புதிய அரசியலமைப்பின் கீழ் ஒரு கட்சி தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவது இது முதல் முறையல்ல. 2017-இல் நடந்த முதல் தேர்தலில், கே.பி. சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (UML) புஷ்ப கமல் தஹால் (பிரசந்தா) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) இடதுசாரிக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வென்றது. இவ்விரு கட்சிகளும் இணைந்து ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சி’யாக உருவெடுத்தது. பின், 2021 இல் அந்த இணைப்பு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, கூட்டணிகள் மாறுவதும், ஒலி, பிரசந்தா மற்றும் நேபாள காங்கிரஸின் ஷேர் பகதூர் தேபா என ஒரு சுழற்சி முறையிலான ஆட்சி மாற்றமுமே அரங்கேறியது. எவராலும் ஒரு நிலையான அரசாங்கத்தை வழங்க முடியவில்லை. இது போன்ற அரசியல் உறுதியின்மை, அரசியல் ஆதிக்கம் ஊழல், வாரிசு அரசி யல், வேலையின்மை, நிலப்பிரபுத்துவம் என சரி செய்யப்படாத பல பிரச்சனைக ளினால் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் விரக்தி மற்றும் அதி ருப்தியின் வெளிப்பாடு ஆகியவை இந்த மாற்றத்தை உருவாக்கியுள்ளது. தற்போது வெற்றி பெற்றுள்ள ஆஎஸ்பி கட்சியானது ஊழல் ஒழிப்பு, வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவ னம் செலுத்துவதன் மூலம் மட்டுமே மக்க ளின் நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைக்க முடியும். இது பாலேந்திர ஷாவின் உடனடி சவாலாக இருக்கும். இல்லை என்றால் அந்நாட்டில் மீண்டும் ஒரு பெரும் போராட்டம் வெடிக்கலாம் என எச்சரிக்கப் படுகிறது. இத்தகைய சூழலில் புவிசார் அரசியல் உறவுகளைச் சமநிலைப்படுத்தி, நேபாளத் தின் தேசிய நலனை முன்னிறுத்திய சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ஆர்எஸ்பி கட்சியும் பிரதமராக பொறுப் பேற்க உள்ள பாலேந்திர ஷா வும் பின்பற்று வார்களா? சீர்திருத்தங்களையும் பொருளா தார வளர்ச்சியையும் கொண்டு வருவார்க ளா என்பது வரும் நாட்களில் தான் தெரிய வரும். ஏனெனில் பாலேந்திர ஷா மேயராக இருந்த போதே அவரது அணுகுமுறை ஏழைகளு க்கு எதிராகவும், அதிகாரத்துவத் தன்மை கொண்டதாகவும் இருந்ததாக விமர்சிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
