states

img

பீகார் தேர்தல் விரைவில் உண்மையை வெளியிடுவோம்!  

பீகார் தேர்தல் விரைவில் உண்மையை வெளியிடுவோம்!  

பீகாரில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி சனிக் கிழமையன்று அவசர ஆலோ சனை நடத்தியது.  தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “பீகார் தேர்தல் முடிவு நம் அனைவருக்கும் நம்ப முடி யாதது. இது காங்கிரசுக்கு மட்டுமல்ல, முழு பீகார் மக்களும் இதை நம்ப வில்லை. எங்கள் கூட்டணிக் கட்சியின ரும் கூட இதை நம்பவில்லை. ஒரு அர சியல் கட்சிக்கு 90 சதவீதத்திற்கும் அதிக மான வெற்றி விகிதம் என்பது இந்திய வரலாற்றில் இதுவரை நடக்கவில்லை. நாங்கள் முழுமையாக ஆய்வு செய்கி றோம். பீகார் முழுவதும் தரவுகளை சேக ரித்து வருகிறோம். ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் உண்மை யை வெளியிடுவோம்” என அவர் கூறி னார்.