ஜம்மு-காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து
9 பேர் பலி ; 29 பேர் படுகாயம்
ஸ்ரீநகர் யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி (“இந்தியா” கூட்டணி) தலைமையில் ஆட்சி நடை பெற்று வருகிறது. ஆனால் காவல்துறை, சட்டம்- ஒழுங்கு அனைத்தும் மோடி அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவு காம் காவல்நிலையத்தில் வெள்ளியன்று இரவு 11.20 மணி அளவில் திடீர் வெடிவிபத்து ஏற் பட்டது. இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக வெடி விபத்தில் காவல்நிலையமும், வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீட்பு பணியில் ஈடுபட்டன. படுகாயமடைந்த 29 பேர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விளக்கம் அளிக்க மறுக்கும் அமித் ஷா அமைச்சகம்
காவல் நிலையத்தில் ஏற்பட்ட இந்த கோர வெடி விபத்தை தொடர்ந்து சனியன்று காலை அமித் ஷாவின் (ஒன்றிய உள்துறை அமைச்சர்) நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் நலின் பிரபாத் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆனால் வெடிவிபத்துக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக பிரபாத் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. பயங்கரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததாக மட்டுமே கூறப்படுகிறது. ஆனால் குண்டுவெடிப்பு போல இருக்கிறது என உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
