articles

ஆர்எஸ்எஸ் தன் சுயரூபத்தை மறைத்து ஏமாற்றித் தப்பிக்கும் போக்கு தொடர்கிறது - ச.வீரமணி

ஆர்எஸ்எஸ் தன் சுயரூபத்தை மறைத்து ஏமாற்றித் தப்பிக்கும் போக்கு தொடர்கிறது

ஆர்எஸ்எஸ்-இன்  நேர்மை குணம் குறித்து நாட்டில் ஒரு சர்ச்சை மற்றும் விவாதம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இந்த அமைப்பு பதிவு செய்யப்படாத நிலை யைக் குறிப்பிடுவதன் மூலம் முன்னி லைப்படுத்தப்படும் சூழல் இதுவாகும். பல்வேறு மட்டங்களில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கங்களின் அமைச்சர்களுக்கு, இவ்வாறு ஆர் எஸ்எஸ்-ஐ விமர்சிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கமானது ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இயங்கிவந்த பாசிஸ்ட்டு களின் சகிப்புத்தன்மையின்மை மற்றும் ஆணவப்போக்கையே தங்கள் இயக்கத்தின் கட்டமைப்பாகவும் கொண் டிருக்கிறது என்பது தெளிவான ஒன்றா கும்.

ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கடந்த காலத்தின் செயல்பாடுகள் குறித்து வானளாவப் புகழ்ந்தார். இவ்வாறு அவ்வியக்கத்தின்  முன்னாள் பிரச்சா ரகரின் உற்சாகமான பாராட்டு நமக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ‘தேசத்திற்குச் செய்த சேவைக்காக’ ஆர்எஸ்எஸ்-ஐ ஓர் அரசு சாரா அமைப்பாக சட்டப்பூர்வ மாக்குவதற்கு மோடி அன்றைய கொடி ஏற்றும் நிகழ்வை பயன்படுத்திக் கொண்டார். இது விசித்திரமாகத் தோன்றினாலும், ஆர்எஸ்எஸ் இயக்கம் நாட்டிலுள்ள சட்டங்கள் மற்றும் அர சமைப்புச்சட்டத்தின் கீழ் செயல்பட வில்லை என்பதையும், அது தனிநபர்க ளின் அமைப்புதான் என்பதால் அதனைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்டவிழ்த்துவிட்டுள்ள பொய்களின் மையக்கரு

எனினும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பதிவு செய்திடும் பிரச்சனை முடிந்திட வில்லை. பாஜக தலைமையிலான அர சாங்கத்தின் அதிகாரிகள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் முடங்கிப் போனதால், இறுதியில் ஆர் எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தே  பதி லளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டி ருக்கிறது. நவம்பர் 9 அன்று, பெங்களூரு வில் நடந்த ‘ஆர்எஸ்எஸ்-இன் 100 ஆண்டு கள் பயணம்: புதிய எல்லைகள்’ நிகழ்வில் பேசிய அவர், “ஆர்எஸ்எஸ் 1925இல் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த நேரத்தில் நமது தலைவ ராக இருந்த (சர்சங்க்சாலக்) கே.பி.ஹெட்கேவார், போராடி வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நாங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய சட்டங்கள் ஆர்எஸ்எஸ் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவில்லை” என்று பேசி இருக்கிறார்.

“பதிவு செய்யப்படாத தனிநபர்க ளின் அமைப்புக்கும் சட்ட அந்தஸ்து  வழங்கப்படுகிறது. நாம் தனிநபர்களின் அமைப்பு என வகைப்படுத்தப்பட்டுள் ளோம். நாம் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு” என்றும் பகவத் கூறினார். அவர் கட்டவிழ்த்துவிட்ட பொய்களின் மையக்கரு இதுதான்.

உண்மைக்குப் புறம்பான கேலிக்கூத்து

ஆரம்பத்தில், ஹெட்கேவார் காங்கி ரசுடன் தொடர்புடையவர் என்பதும், அதன் ஒரு பகுதியாக இருந்தவர் என்பதும் உண்மை. ஆனால், ஆர் எஸ்எஸ் இயக்கம் பிரிட்டிஷ் அர சாங்கத்தை எதிர்க்கவில்லை என்பதும்  உண்மை. இந்த அமைப்பின் அடிப்ப டைக் கொள்கையானது, இந்து ராஷ்டி ரத்தை உருவாக்குவதற்காக பாடுபடு வதாகும். மேலும் அதன் குறிக்கோள் ‘இந்துக்களை ஒன்றிணைத்தல்’ என்ப தும் ‘இந்துத்துவாவை இராணுவமய மாக்குதல்’ என்பதுமாகும். இது ஆர்எஸ் எஸ்-இன் உயர்மட்ட சித்தாந்தவாதி யான கோல்வால்கரால் அதிகாரப்பூர்வ மாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள் ளது.

மேலும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் சாதி, மதம், கலாச்சாரம், மொழி வேறுபாடு களையெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரும் ஒன்றுபட்டு நின்று போரா டியசமயத்தில் அதற்கு எதிராக செயல் பட்டதுடன், பிரிட்டிஷாருக்கு ஆதரவாக வும் இருந்ததுதான் ஆர்எஸ்எஸ் இயக்க மாகும். இவ்வாறு இருந்த ஆர்எஸ்எஸ் இப்போது ‘பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டதால் தங்கள் இயக்கத்தைப் பதிவு செய்ய வில்லை என்று கூறுவது’ உண்மைக்குப் புறம்பான கேலிக்கூத்தாகும்.

பொது நிதிக்கு வரவேண்டியதை  திசை திருப்பிடும் முயற்சி

சமீபத்தில், பாஜக தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொது நிதிக்கு வரவேண்டிய சட்டப்பூர்வமான வரி வரு வாயைத் திருப்பிவிடுவதற்கான முயற்சி களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, மோடி அரசாங்கம், வழக்குகளைப் பதிவு செய்யவும், ஒரு சிறிய ஆதாரம் கூட இல்லாமல் மக்களைக் கைது செய்யவும் அமலாக்கத் துறையினருக்கு பண மோசடி தடுப்புச் சட்டத்தை ஓர் ஆயுத மாகப் பயன்படுத்தி, பரந்த அளவி லான அதிகாரங்களை வழங்கியுள் ளது. இதனைப்பயன்படுத்தி எதிர்க்கட்சி களின் தலைவர்கள் மீது நடவடிக்கை கள் எடுத்ததை நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன.

எனினும், ஆர்எஸ்எஸ்-இடம் உள்ள பெரும் நிதி மற்றும் ரியல் எஸ்டேட் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பகவத், இவை அதன் தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகளின் தன்னார்வ நன் கொடைகள் என்று கூறி அதன்மீதான குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளியுள்ளார். அவர் மறைக்க முயற்சிப்பது என்ன வென்றால், இந்த அமைப்பு தனிநபர்க ளின் அமைப்பு என்று கூறி அதன் சொத்துகள் குறித்த விவரங்களைக் கூற முடியாது என்று கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ்-க்கு நம் நாட்டில் மட்டு மல்ல உலகம் முழுவதும் ஏராளமாக சொத்துகள் உள்ளன. அதில் அது மாளிகைகள் மற்றும் பிற கட்ட மைப்புகளைக் கட்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

ஒளிவு மறைவின்மையே நல்லொழுக்க முன்னுதாரணம்

துரதிர்ஷ்டவசமாக, அதன் பதிவு செய்யப்படாத நிலையின் விளைவாக, அத்தகைய சொத்துக்களை வெளிப் படையாகப் பகிரங்கமாக வெளியிடுவது இல்லை. ஆர்எஸ்எஸ் உண்மையி லேயே நல்லொழுக்கத்தின் முன்னு தாரணமாக இருந்தால், அதன் நிதி குறித்து அது ஏன் ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும்?

ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தம், செயல்பாடுகள் மற்றும் நிறுவன அமைப்பு பற்றிய பெரிய கேள்விக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவை தொடர்பாக பீப்பிள்ஸ் டெமாக்ர சியின் கடைசி சில இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறோம். அவற்றில் அவ்வியக் கம் எப்படியெல்லாம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்ப தையும் தெரிவித்திருக்கிறோம்.  எனவே அவை குறித்து மீண்டும் இங்கே  ஆராயவேண்டிய அவசியம் இல்லை.

ஏமாற்றின் மறுவடிவு

இந்திய அரசமைப்புச்சட்டத்தை ஆர்எஸ்எஸ் நம்புகிறது என்றும், தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற அனைத்து முக்கிய தேசிய சின்னங்களையும் அங்கீகரிக்கிறது என்றும் பகவத் கூறுகி றார். இது, ஆர்எஸ்எஸ் பின்பற்றி வரும் கொள்கைகளையும், செயல்பாடுக ளையும் கூறாமல் மக்களை ஏமாற்றுவ தன் மறுவடிவமாகும்.

மோடியே செங்கோட்டையிலிருந்து இடி முழக்கமிட்டு, அதன் சிறந்த சேவை யை உறுதிப்படுத்தினார். மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் வெறுப்பைத் தூண்டியதற்காக ஆர் எஸ்எஸ் மீதான குற்றச்சாட்டுகள் அதன் விமர்சகர்களால் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் மட்டுமல்ல. அதன் மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் தொடர் பாக குறைந்தது ஐந்து நீதி விசாரணை ஆணையங்கள் - 1969 அகமதாபாத் கல வரம் குறித்த ஜெகன்மோகன் ரெட்டி அறிக்கை; 1970 பிவாண்டி கலவரம் குறித்த டி.பி. மடோன் அறிக்கை; 1971 தலசேரி கலவரம் குறித்த ஜோசப் விதாயத்தில் அறிக்கை; 1979இல் ஜாம்ஷெட்பூர் கலவரம் குறித்த ஜிதேந்திர நாராயண் அறிக்கை; 1982 கன்னியாகுமரி கலவரம் குறித்த பி.வேணுகோபால் அறிக்கை - முஸ்லிம்கள் மற்றும் பிற குடிமக்க ளின் உயிர்கள் மற்றும் சொத்துக்களை பெருமளவில் இழந்த இந்த பெரிய அளவிலான வன்முறை வெறியாட்ட நட வடிக்கைகளில் ஆர்எஸ்எஸ்-இன் சித் தாந்தத்துடன் வலுவான தொடர்புகளைக் கொண்ட அமைப்புகள் மற்றும் கட்சிக ளின் பங்கை வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளன. எனினும், எதிர்பார்த்தபடி, அந்த இயக்கத்தின்மீது எந்தவொரு நடவ டிக்கையும் இல்லை. அப்போது நடை பெற்ற நிவாரணப் பணிகளுக்கான தணிக்கை கூட இல்லை.

பிற மதத்தவர் இந்தியரல்லவாம்

இறுதியாக, சாவர்க்கரால் வகுக்கப் பட்டு, கோல்வால்கரால் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு, மேலும் வலுப் படுத்தப்பட்ட தேசம் மற்றும் தேசியத்தின் வரையறை, இந்தியாவை ‘மாத்ருபூமி’, ‘பித்ருபூமி’ மற்றும் முக்கியமாக ‘புண்ய பூமி’ என்று அங்கீகரிப்பவர்களை உண் மையான இந்தியர்களாகக் கருதலாம் என்று வரையறுக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் சேர்ந்த வர்கள், தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதன் சுதந்திரத்தையும் சமத்து வத்தையும் அனுபவிக்கும் மக்கள் ஒரு இந்தியராக இருக்கத் தகுதியற்றவர்கள் என்று இவர்கள் கூறுவது என்பது பகல் வெளிச்சம் போல் தெளிவாகிறது! ஆர் எஸ்எஸ்-இன் அடிப்படைக் கருத்து மதச்சார்பற்ற ஜனநாயக அரசமைப்பு மற்றும் குடியரசுக்கு எதிரானதாகும். எனவே, ஆர்எஸ்எஸ் ‘தனிநபர்களின் அமைப்பு’ என்றும், அவ்வாறே அங்கீ கரிக்கப்பட்டிருக்கிறது என்றும் பகவத் கூறுவதும், எனவே ஆர்எஸ்எஸ் பதிவு செய்யும் வரம்பிற்கு வெளியே இருக்கத் தகுதியுள்ளது என்றும் பகவத் கூறுவது, மோசடியான ஒன்றாகும். ஆர்எஸ்எஸ் அதன் விவகாரங்களை பொது வெளியில் வெளியிடச் செய்ய வேண்டியது அவசிய மாகும்.