articles

img

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிலும் பெண்களே பாதிக்கப்படும் நிலை

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிலும் பெண்களே பாதிக்கப்படும் நிலை

சென்னை, மார்ச் 11 - எரிவாயு சிலிண்டர் தட்டுப் பாட்டிலும், பெண்களே  பெரிதும் பாதிக்கப்படுவ தால், பிரச்சனைக்கு விரை ந்து தீர்வுகாண வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் கூறியுள்ளது.  சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். “சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகும் பல நாட்கள் முதல் வாரங்கள் வரை காத் திருக்க வேண்டிய நிலை உரு வாகியுள்ளது. இந்த நிலை மை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை கடு மையாக பாதித்து வரு கிறது. குறிப்பாக பெண்கள் தலைமையிலான குடும்பங் கள், தினக்கூலி தொழிலா ளர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஆகியோருக்கு சிலிண்டர் கிடைக்காத நிலை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி யுள்ளது.  பல ஏழைக் குடும்பங் கள் மீண்டும் விறகு அடுப்பு போன்ற பழைய எரிபொருட் களை பயன்படுத்தும் நிலை க்கு தள்ளப்படுகின்றனர். இது பெண்களின் உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சமை யலுக்கான கூடுதல் உழைப் பையும் நேரத்தையும் பெண்கள் மீது சுமத்துகிறது.  எனவே, போதிய அள வில் சமையல் எரிவாயு சிலி ண்டர்களின் விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும்; முன்பதிவு செய்த  பொதுமக்களுக்கு தாமத மின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; விநியோக தாம தத்திற்கு காரணமான நிர்வாக குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்; கள்ளச் சந்தை மற்றும் அதிக விலை யில் விற்பனை செய்யும் செயல்களை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு வலி யுறுத்துகிறது” என்று அறிக் கையில் குறிப்பிட்டுள்ளனர்.