கல்வி ஒளியில் மலரும் சமூகம்!
“கா லங்காலமாக வாழ்வின் விளிம்புகளில் நின்றுகொண்டிருந்த நரிக்குறவர் இனம், இன்று கல்வியின் மூலம் தன் எதிர்காலத்தை புதிதாய் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது என்பது எத்தனை பெருமைக்குரிய செய்தி! அடர்த்தியான தாடியும், மீசையும், தலைப் பாகையும் கொண்ட இவர்கள், கையில் பாசியையும் கம்பியையும் வைத்து மாலைகளைக் கட்டிக் கொண்டே இருப்பவர்கள். மேலும் திருவிழாக் காலங்களில் பலூன், பொம்மைகள், பச்சைக்குத்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள். கிராமப்புறங்களில் மரத்தடி, நகரங்களில் பேருந்து, ரயில் நிலையங்களில் எப்போதும் காணக்கூடியவர்கள். நாடோடிகளைப் போலவே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். சமீப காலமாக ஒரு சில பகுதிகளில் நிரந்தரமாக தங்கி வருகின்றனர். இதனால் இவர்களின் குழந்தைகள் பல பகுதிகளில் கல்வி கற்கப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் பாசிமணிகள் பின்னினாலும், படிப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள். பழங்குடியினர் அந்தஸ்து தமிழ்நாட்டில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் இணைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முதல் வர் மு.க.ஸ்டாலின், விளிம்பு நிலையிலுள்ள அம்மக்க ளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது என்று வரவேற்றிருந்தார். நம்பிக்கையின் தொடக்கம் “ஒரு விதை முளைத்தால் காடு முழுவதும் பசுமை யாகும்” என்பது நம் முன்னோர்களின் திருவாக்கு. அந்த விதை இன்று நரிக்குறவர் சமூகத்தின் மண்ணில் முளைத்து, நம்பிக்கையின் வேர்களை விரித்துக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்னும் இளைஞன் அதற்கு எடுத்துக்காட்டு. அரசன் - குமாரி தம்பதியினரின் மகனான சக்திவேல், திருவிழாக்களில் சிறிய கடை வைத்து வாழ்க்கை நடத்தும் பெற்றோரின் கண்ணீரையும் கனவையும் சுமந்து, தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கா னிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். படிப்பை முடித்ததும் கிராமப்புற தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணி யாற்றினார். ஆனால் அவரது கனவு அங்கேயே நின்று விடவில்லை. “முயற்சி திருவினையாக்கும்” என்பதை நிரூபிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வுக்குத் தயாரானார் சக்திவேல். அந்த தேர்வில் 250 மதிப்பெண்கள் பெற்று, இடஒதுக்கீட்டில் பழங்குடியினர் பிரிவில் 20 ஆவது இடம் பிடித்தார். இதன் மூலம் வருவாய்த்துறையில் இளநிலை உதவி யாளர் பணி பெற்றார். நரிக்குறவர் சமூகத்தில் முதல் அரசுப் பணியாளர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தி ருக்கிறது. இந்த வாய்ப்பைக் கொடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சக்திவேல், தன் சமு தாயத்தின் குரலாக மாறியிருக்கிறார். எந்த ஒரு சமூகமும் முன்னேற வேண்டும் என்றால் படிப்புதான் முக்கியம் என்றும், குறிப்பாக மிகமிக பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய நரிக்குறவர் சமூகம் முன்னேற வேண்டும் என்றால் ஒவ்வொரு குடும் பத்திற்கும் படிப்பு அவசியம் என்றும் அவர் கூறி யிருப்பது, வெறும் வார்த்தைகள் அல்ல, வாழ்ந்து காட்டப்பட்ட உண்மைகள். நீதியின் முதல் தூதுவர் சக்திவேலின் சாதனை ஒரு தனி மரமென்றால், கருங்கல்பட்டி பஞ்சம்தாங்கி பகுதியைச் சேர்ந்த ரதிஸ்ரீ யின் பயணம் மற்றொரு பசுமையான மரம். மணிகண்ட னின் மகளான ரதிஸ்ரீ, தமிழகத்தில் முதல்முறையாக நரிக்குறவர் இனத்திலிருந்து வழக்கறிஞர் படிப்பைச் சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறார். துளசி மணி விற்கும் மணிகண்டனின் மகள் ரதிஸ்ரீ, நீதியின் குரலாக ஒழிக்கப் மாறப்போகிறார். தேவை ஆராய்ச்சிகளும் அரசு முயற்சிகளும் நரிக்குறவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் கூறுகள் தொழில், தொழில்சார்ந்த பழக்க வழக்கங்கள், இன்றைய நிலையில் இவர்களின் கல்விச்சூழல் போன்றவற்றை விரிவாக ஆராய வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்கள் இவர்களிடம் முழுமையாகச் சென்றடையும் வகையில் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு திட்டமும் இவர்களுக்கு முழுமை யாகச் சென்றடையாத நிலை இன்னும் உள்ளது. இத னடிப்படையில் இவர்களின் வாழ்வியல் தரம் இன்ற ளவும் மேம்படாத நிலையில் பின்தங்கியே உள்ளது என்பது வருத்தமான உண்மை. மறுமலர்ச்சியின் தொடக்கம் சக்திவேலும் ரதிஸ்ரீயும் காட்டும் வழி நம்பிக்கை யின் வழி என்பதை நிரூபித்திருக்கிறார்கள். நரிக்குறவர் சமூகத்தின் முதல் அரசு ஊழியரும், முதல் வழக்கறிஞர் படிப்பு படிக்கும் மாணவியும் இன்று முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள். இவர்களைப் போல் பலர் வரவேண்டும். இவர்களைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான நரிக்குறவர் இளைஞர்களும் இளம்பெண்களும் கல்வி பெற்று உயர வேண்டும். பாசிமணிகளைப் பின்னும் கைகள், இன்று புத்த கங்களைப் புரட்டுகின்றன. வேட்டையாடிய கண்கள், இன்று எழுத்துகளை வேட்டையாடுகின்றன. நாடோடி களாக அலைந்த கால்கள், இன்று நிலைத்த வாழ்வை நோக்கி நடக்கின்றன. இதுதான் மாற்றம்; முன்னேற்றம். சக்திவேல், ரதிஸ்ரீ போன்றோர் அந்தச் சமூகத்தின் கனவுகளாக, நம்பிக்கைகளாக, எதிர்காலமாக நிற்கி றார்கள். இவர்களின் வெற்றி, ஒரு சமூகத்தின் மறு மலர்ச்சியின் தொடக்கம். வரலாற்றின் விளிம்பில் நின்றவர்கள், இன்று வர லாற்றை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். வானளவு உயர்ந்த கனவுகள் இன்று அவர்கள் வாழ்வில் வெற்றி களாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதை விட வேறென்ன பெருமை இருக்க முடியும்?
