tamilnadu

img

இடதுசாரிகள் ஒன்றிணைந்து பாஜக பாசிசத்தை முறியடிப்போம்!

விழுப்புரம், ஜன. 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி  ஆகியோர் கலந்து கொண்டு, இடது சாரி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

இரா. முத்தரசன்

உலகளவில் வலதுசாரி சக்திகள் மேலோங்கி வரும் சூழலிலும், இந்தியாவில் மதவெறி, வகுப்புவாத சக்திகள் பத்தாண்டுகளாக அதி காரத்தில் இருக்கும் நிலையிலும், இந்த மாநாடு முக்கியத்துவம் பெறு கிறது என்று இரா. முத்தரசன் தொடக்க வுரையில் குறிப்பிட்டார். மார்க்சிய சிந்தனையின் தொடக்கம் முதல் இன்று வரை இடது சாரிகளின் பயணத்தை விவரித்த அவர், 1848இல் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதல், 1917 ரஷ்யப் புரட்சி வரையிலான வரலாற்றை விளக்கி னார். இந்திய விடுதலைப் போராட்டத் திலும், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலும் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்தார். “இந்துத்துவா கருத்தியலை முன்வைத்து இயங்கும் மதவெறி சக்திகள், அரசியலமைப்புச் சட்ட த்தை ஏற்றுக்கொள்ளாமல், அதனைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன” என்று எச்சரித்த அவர், 1990களுக்குப் பிறகு நவதாராளமயக் கொள்கையால் நாட்டின் சுய சார்பு பலவீனமடைந்ததையும் சுட்டிக் காட்டினார். தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளின் போராட்ட வரலாற்றை விவரித்த முத்தரசன், 1943-இல் தஞ்சாவூர் மாவட்டம் தென்பரையில் தொடங்கிய விவசாயிகள் சங்கம், சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள் ஆகி யவற்றின் வெற்றிகளை நினைவு கூர்ந்தார். தமிழ்நாடு பெயர் மாற்றத் திற்காக உயிர்நீத்த சங்கரலிங்க னாரின் தியாகத்தையும் நினைவு படுத்தினார். “இன்றையச் சூழலில் இடது சாரிக் கட்சிகள், மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகள், தேசநலன் பேணும் முற்போக்குச் சக்திகள் என அனை வரும் ஒன்றிணைந்து பரந்துபட்ட அணி அமைக்க வேண்டியது அவ சியம். அரசியலமைப்புச் சட்டத்தை யும், ஜனநாயகத்தையும், மதச்சார் பின்மையையும் பாதுகாக்க இடது சாரிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி பாசிச பாஜகவை வீழ்த்துவோம்” என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

பழ. ஆசைத்தம்பி

மாநாட்டில் வாழ்த்துரை நிகழ்த்திய பழ. ஆசைத்தம்பி, நாட்டின் தற்போதைய சூழலில் இடதுசாரி களின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும், மதச்சார்பற்ற சக்திகளுடன் கைகோர்த்து பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “தற்போதைய ஒன்றிய பாஜக  ஆட்சி, அரசியலமைப்பின் அடிப்படை நெறிகளைச் சிதைத்து,  மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சிக் கிறது. அம்பேத்கர் வகுத்த அரசிய லமைப்பை மாற்றி, மனுதர்ம அடிப்ப டையிலான புதிய அரசியலமைப்பை கொண்டுவர பாஜக திட்டமிடுகிறது” என்று அவர் எச்சரித்தார். “இந்த நாட்டின் பன்முகத்தன்மை யை, பல்வேறு மொழிகளையும் கலாச்சாரங்களையும் அழித்து, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையைத் திணிக்க பாஜக முயற்சிக்கிறது. தொழிலாளர் களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப் பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகிறது” என்று அவர் சாடினார். “இந்தச் சூழலில் இடதுசாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டு மல்லாமல், சமூக நீதி, மதச் சார்பின்மை, கூட்டாட்சிக் கொள்கை களில் நம்பிக்கை கொண்ட அனைத்துச் சக்திகளையும் ஒருங்கி ணைத்து பரந்துபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னிறுத்தி, பொருளாதார சமத்துவ மின்மைக்கு எதிரான போராட்டங் களை தீவிரப்படுத்த வேண்டும்” என்றார் ஆசைத்தம்பி. “தமிழகத்தில் திராவிட இயக்கங்களுடனான கூட்டணி வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெரியார், அண்ணா காலம் முதல் இன்று வரை இடதுசாரிகளும் திராவிட இயக்கங்களும் சமூக நீதி,  மதச்சார்பின்மை ஆகிய கொள்கை களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டுறவை மேலும் வலுப்படுத்தி, பாசிச எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.