tamilnadu

img

உங்களை விடவா?

உங்களை விடவா?

“காந்தி ஒரு பலவீனமான ஆசாமி.  பாசாங்குக்கார மனிதன்” “நேரு ஓர் ஒழுக்கமில்லாத குடிகாரன்” “நேரு குடும்பம் நாட்டைக்  கொள்ளையடித்த குடும்பம்.” “மோடி ஆட்சிக்கு வந்த பிற்பாடுதான்  இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்தது”. “அனைத்து சிறுபான்மையினரும்  நம்பத்தகாதவர்கள் - தேச விரோதிகள்”. “இந்தியா ஒரு ஹிந்து நாடாக  அறிவிக்கப்படவேண்டும்”. “என்கவுன்ட்டர் கொலைகளை வரவேற்கிறேன். கோழைகள்தான் மனித உரிமை பேசுவார்கள்”. “மோடியை எதிர்த்தால் ஹிந்துவானாலும்  தேச விரோதிதான்”. “ஜனநாயக முறையை சர்வாதிகாரத்தால் மாற்றவேண்டும்”.  “ஆயுர்வேதத்தில் அனைத்திற்கும் தீர்வு உள்ளது. ஆங்கில மருத்துவம் தீமையானது”. “வேதங்களில் உள்ள அறிவை பிரிட்டிஷ் ஆட்சி திருடியதால்தான் மேலைநாடுகள் வளர்ச்சியடைந்தன”. “பசு மட்டுமே ஆக்ஸிஜனை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியிடும் ஒரே விலங்கு”. “மாட்டுச்சாணம் அணுசக்தி தாக்குதலிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும்”. இப்படிச் சொன்னவர் மனநோயா ளியா, காரியக்கிறுக்கா என்று குழம்பு கிறீர்கள்தானே?  இருங்கள். சொல்ல இன்னுங்கொஞ்சம் இருக்கிறது. உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டத்தை “பயங்கரவாதிகளின் போராட்டம்” என்ற இவர், “அந்தப் போராட்  டத்தில் கொலைகளும் , பாலியல் வன் புணர்வுகளும் நடக்கின்றன” என்று இழிவு செய்தவர்.  இதைச் சொன்னதற்காக விமான நிலைய சிஆர்பிஎப் ராணுவ வீராங்கனை யிடம் கன்னத்தில் பொளேரென்று அறை வாங்கியவர். வெறுப்பூட்டும் பதிவுகள் - தவறான செயல்பாடுகள் போன்றவற்றால் விதி களை மீறியதாகக் குற்றம் சாட்டி, ட்விட்டர் இவரைத் தடை செய்த காரியமும் நடந் தது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஆட்சேப ணைக்குரிய ட்வீட்களைப் பதிவிட்டதாகக் கூறி, இவர் மீது அந்தேரி நீதிமன்றம் விசா ரணை நடத்த உத்தரவிட்டதையும் குறித் துக்கொள்ளுங்கள். இவருக்குத்தான் பத்மஸ்ரீ விருது குடுத்து,  இசட்பிளஸ் பாதுகாப்பும்கூட வழங்கினார் பிரதமர் மோடி. விரைவில் பாரத ரத்னா விருது வழங்கப்  பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். இவர் அகில உலக நடிகையர் திலகம் கங்கனா ரனாவத். ‘இந்திரா காந்தி கொண்டு வந்த  எமெர்ஜென்சி குறித்த என் திரைப்படத் துக்காக இசையமைக்க ஏஆர்.ரஹ்மானி டம் போனேன். அவர் இசையமைக்க மறுத்து விட்டார். ஒரு பிரச்சாரப் படத்துக்கு பங்க ளிக்க ரஹ்மான் விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள்’ என்று சொன்ன அகில உலக நடிகையர் திலகம் கங்கனா ரனாவத், அத்தோடு நிறுத்தியிருக்க வேண்டும்.  ஆனால்,’உங்களை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒரு மனிதரை நான்  சந்தித்ததில்லை’ என்றும் இன்ஸ்ட்டாகிராமி யிருக்கிறார். இந்த கலைத்தாயின் புத்தியும் வன்ம மும் ஊரறிந்தது.  சக மனிதனை நேசிப்பவன் சக மனி தனைக் கொல்பவனை சந்திக்கக்கூட விரும்பமாட்டான். அப்பட்டமான பாசிஸ்ட்  மனப்பான்மை கொண்ட கங்கனாவின் படம் எந்த லட்சணத்தில் இருந்திருக்குமென்று ஊகித்து, அவரை மறுத்ததன் மூலம் ரஹ்மான் நெஞ்சில் உயர்கிறார்.  - ரத்தன் சந்திரசேகர்