லாத்தூர் மாநகராட்சி தேர்தல் பாஜக - அஜித்பவார் கட்சி கூட்டணி முறிவு
மகாராஷ்டிர மாநிலத்தில் 2026 ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற வுள்ள லாத்தூர் மாநகராட்சித் தேர்தலுக்கான பாஜக மற்றும் தேசிய வாதக் காங்கிரஸ் கட்சி (அஜித்பவார் பிரிவு) இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால், அங்குள்ள 70 வார்டுகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடப் போவ தாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே, கூட்டணி இல்லை என்ற முடிவை அதிகா ரப்பூர்வமாக அறிவித்தார். பல வாரங்களாகத் தொடர்ந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. அஜித்பவார் தலைமையிலான என்சிபி, தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிக இடங்களைக் கேட்டதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த ஒருதலைப் பட்சமான முடிவு “ஆணவமானது” என்று என்சிபி செய்தித் தொடர்பாளர் மகேஷ் லாண்ட்கே பாஜகவை கடுமை யாகச் சாடியுள்ளார். “கூட்டணி என்பது இப்படிச் செயல்படக் கூடாது. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் எதிர்க் கட்சிகளுக்கு பாஜகவே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. நாங்களும் அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டு அவர்களின் அதீத நம்பிக்கையைத் தகர்ப்போம்,” என்று அவர் கூறினார். இந்தக் கூட்டணி முறிவு, எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடிக்கு சாதகமாக அமையக்கூடும் என்று பார்க் கப்படுகிறது. எனினும் பலமுனைப் போட்டி நிலவும் சூழலில் வாக்குகள் பிரிவது முடிவுகளை மாற்றியமைக்க லாம் எனவும் கூறப்படுகிறது.