tamilnadu

குல்தீப் செங்கார் விடுதலை நீதித்துறைக்கு கரும்புள்ளி!

குல்தீப் செங்கார் விடுதலை நீதித்துறைக்கு கரும்புள்ளி! சிபிஎம் அரசியல் தலைமைக்குழு  கடும் விமர்சனம்

புதுதில்லி, டிச.27- உன்னாவ் பாலியல் வல்லுறவு  வழக்கில் தண்டனை பெற்று சிறை யிலிருந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது, நீதித்துறைக்கு ஒரு கரும்புள்ளி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கடுமையாக கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கூட்  டம், வெள்ளிக்கிழமை (டிச. 26)  அன்று புதுதில்லியில் நடைபெற் றது. அதனைத் தொடர்ந்து அது வெளியிட்ட அறிக்கையிலேயே, உன்னாவ் வழக்கு தொடர்பான உத்தரவை விமர்சித்துள்ளது. “உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்-வில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்  கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான, முன்னாள் பாஜக  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கா ருக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  சாட்சிகளையும், பாதிக்கப்பட்ட பெண்ணையும் பாதிக்கும் வகை யில் குற்றவாளி தரப்பினர் மேற் கொண்ட பல்வேறு வன்முறை மற்  றும் மிரட்டல் முயற்சிகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் விரிவாகப் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட  பெண்ணுடைய தந்தையின் காவல்  மரண வழக்கிலும் செங்கார் குற்றம்  சாட்டப்பட்ட ஒரு நபராவார். ஜாமீன்  வழங்கும்போது இந்தத் தீவிரமான உண்மைகளை நீதிமன்றம் கவ னத்தில் கொள்ளத் தவறியது துர திர்ஷ்டவசமானது.  தொழில்நுட்பக் காரணங்க ளால் அவர் இன்னும் விடுவிக்கப்  படாவிட்டாலும், இந்த உத்தரவு  நீதித்துறைக்கு ஒரு கரும்புள்ளி யாகும். மேலும், இது நீதிக்காகப் போராடும் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை. இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்  முறைச் சம்பவங்கள் பன்மடங்கு  அதிகரித்துள்ளன. குற்றஞ்சாட்டப் பட்ட கயவர்கள் மீது அரசாங்கங்கள் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறுவதும், அவர்களுக்கு மறை முகமாக ஆதரவளிப்பதும் இத்த கைய கயவர்களுக்குத் தைரிய மூட்டியுள்ளன. இது தற்போதைய ஆளும் வர்க்கத்தின் பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான,  சனாதன மனு(அ)நீதி மனப்பான் மையைப் பிரதிபலிக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறி யுள்ளது.