tamilnadu

img

தேர்தல் வெற்றிக்காக பாஜக எதையும் செய்யும் கெஜ்ரிவால் எச்சரிக்கை

தில்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜக எதையும் செய்யும் என்ற நிலையில் உள்ளது என ஆம் ஆத்மி தலை வர் அரவிந்த் கெஜ்ரி வால் தனது கட்சி தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில்,”தில்லி சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பாஜக முறைகேடு செய்து வருகிறது. பாஜகவிடம் வலுவான வேட்பாளர்கள் இல்லை. அதே போல அரசியல் பிரச்சனைகளை முன்வைக்க அவர்களிடம் போதுமான நிகழ்வுகள் எதுவும் இல்லை. இதனால் தேர்தல் வெற்றிக்காக பாஜக எதையும் செய்யும்  என்ற நிலைமை உள்ளது” என அவர் கூறினார்.