tamilnadu

img

கம்பீரமாக எழுகிறார் காரல் மார்க்ஸ்

கம்பீரமாக எழுகிறார் காரல் மார்க்ஸ்

மாமேதை காரல் மார்க்ஸ் முழு உருவச்சிலை  தயாராகிறது                                                                மாமேதை காரல் மார்க்ஸ் முழு உருவச்சிலை சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் கன்னிமாரா நூலகம் வாயிலில் தமிழக அரசு அமைக்க உள்ளது. இதற்காக மார்க்ஸ்  முழு உருவச்சிலை பூவிருந்தவல்லியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் ஞாயிறன்று (நவ.9) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிலை வடிக்கும் பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். சிலை நிறுவுவதற்கான மேடை அமைக்கும்பணி கன்னிமாரா நூலகம் வாயிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.