வெண்மணி தியாகிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் செவ்வணக்கம்
மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு, கே. பாலகிருஷ்ணன், வியாழனன்று நாகப்பட்டினம் மாவட்டம் வருகை தந்தார். தொடர்ந்து, வெண்மணியின் வீரத்தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.எம். அபுபக்கர், ப.சுபாஷ் சந்திரபோஸ், ஏ. வடிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய - தாலுகா மற்றும் கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.