tamilnadu

img

நெல் கொள்முதல் நிலையத்தை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

நெல் கொள்முதல் நிலையத்தை  ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

பாபநாசம், செப். 1-  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் ஊராட்சியில், பாபநாசம் எம்.எல்.ஏ  தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை,  விவசாயிகளின் பயன்பாட்டிற்காக பாபநாசம் எம்.எல்.ஏ  ஜவாஹிருல்லா  அர்ப்பணித்தார்.  அய்யம்பேட்டை அருகே, சூலமங்கலம் ஊராட்சியில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி‌ ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட, தரைத் தளத்துடன் கூடிய நெல் கொள்முதல் நிலைய ஷெட்டை, விவசாயிகளின் பயன்பாட்டிற்கென, பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா அர்ப்பணித்தார்.  தொடர்ந்து, சூலமங்கலம் ஊராட்சியில் பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி‌ ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஈமச் சடங்கு மண்டபத்தின் சாவியை கிராம நாட்டாண்மைகள், பொதுமக்களிடம், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா  வழங்கினார்.  இதில், பாபநாசம் பி.டி.ஓ சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய என்ஜினீயர் செங்குட்டுவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பாதுஷா, திமுக பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.