tamilnadu

img

ஜன.29 சென்னையில் சத்துணவு ஊழியர்கள் 24 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சியில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் முடிவு]

திருச்சிராப்பள்ளி,ஜன.18- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தொகுப்பூதியம் ஒழிப்பு சிறப்பு மாநாடு திருச்சியில் ஜனவரி 18 அன்று நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஐ.அல் போன்சா வரவேற்றார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் துவக்க வுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலா ளர் அ.மலர்விழி பேசினார். தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத்தலைவர் கே. பழனிச்சாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் எம்.ஆரோக்கியராஜ், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்க மாநிலத்தலைவர் எஸ்.ரத்தின மாலா,  ஜனநாயக மாதர் சங்க மாநி லத்தலைவர் எஸ்.வாலண்டினா, இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் ஜி.கே. மோகன்,  அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனைவர் கா.பால்பாண்டி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். சிபிஎம் கந்தர்வகேட்டை  சட்டமன்ற  உறுப்பினர் எம். சின்னதுரை சிறப்பு ரையாற்றினார். சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் நிறைவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மு. செல்வராணி, மாநில துணைத்தலைவர்கள் ஆ. பெரியசாமி, கே. அண்ணாதுரை, மு.தமிழரசன், ஆர்.எம். மஞ்சுளா, த. வாசுகி, மாநில செயலாளர்கள் எஸ். கற்பகம், எஸ்.சுமதி, பெ.மகேஸ் வரி, எஸ். பாண்டிசெல்வி, அ.லதா, ஜெ.நிர்மலா, ஆ. ஜெசி ஆகியோர் கருத்துரையாற்றினர்.   மாநாட்டில் தொகுப்பூதிய முறை யில் காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்கு வெளியிட்ட அரசாணை 95 ஐ ரத்து செய்து, கால முறை ஊதி யத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.  சத்துணவு ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  முதலமைச்சர் தேர்தல் காலத்தில் சத்துணவு ஊழியர்க ளது கோரிக்கைகளை நிறைவேற்று வேன் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.  போர்க் கால அடிப்படையில் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜனவரி  29ஆம் தேதி சென்னையில் உள்ள சமூக நல ஆணையர் அலுவலகம் முன் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. முடிவில் மாநில பொருளா ளர் எம்.ஆர்.திலகவதி நன்றி கூறினார்.