சென்னை,ஜன.18- உலகைத் தமிழுக்கும்; தமிழை உலகுக்கும் என்ற உயரிய நோக்கத் தோடு கொண்டாடப்படும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா இந்த ஆண்டு, சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெற்றது. இந்த ஆண்டு 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்புலக ஆளு மைகள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டன. கடந்த இரண்டாண்டுகளில், 166 தமிழ் நூல்கள் 32 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்படுவதற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்பு பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல்- கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் 2023 மற்றும் 2024- ஆம் ஆண்டுகளுக்கான மொழிபெய ர்ப்பு மானியம் வாயிலாக மொழி பெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் வெளியிட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் தமிழ் மொழியிலிருந்து அயலக மொழிகளு க்கு 1,005 ஒப்பந்தங்களும் அயலக மொழியிலிருந்து தமிழ்மொழிக்கு 120 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன. குறிப்பாக அரபி மொழிக்கு 33 ஒப்பந்தங்களும், பிரெஞ்சு மொழி க்கு 32 ஒப்பந்தங்களும், மலாய் மொழி க்கு 28 ஒப்பந்தங்களும் கையெழுத்தா கியுள்ளன.
விருதுகள்
நிறைவு விழாவில் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருதினை பி.டபிள்யு.பி குளோபல் அம்பாசிடர் (PWB Global Ambass ador), ஏசியன் பப்ளிசிங் அசோசியே சன் (ASEAN Publishing Association), ஆப்ரிகன் பப்ளிசர்ஸ் நெட்வொர்க் (African Publishers Network (APNET), ஃப்ரான்கோபோன் அம்பாசிடர் (Franco phone Ambassador) ஆகிய பதிப்பகம் மற்றும் அமைப்பிற்கும், உலகளா விய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தகக் கண்காட்சி சிறப்பு விருதை ரியாத் புத்தக கண்காட்சிக்கு, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதை தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா (Thomas Hitoshi Pruiksma) மற்றும் பேராசிரியர் டாக்டர் அருள்சிவன் ராஜு ஆகியோருக் கும், நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதை கிறிஸ்டியன் வியாஸ் (Chris tian Weiss) மற்றும் கே.எஸ். வெங்கடா சலம் ஆகியோருக்கும், கூட்டு வெளி யீட்டு கூட்டாண்மை விருதினை ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்திற் கும், பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருதை துருக்கி நாட்டின் டிஇடிஏ (TEDA)வுக்கும் புத்தக ஊக்குவிப்பு விரு தினை மங்கோலியா மேஜிக் பாக்ஸ் மற்றும் இத்தாலி நாட்டின் கியூண்டி ஓடியன் புத்தக விற்பனை நிலையத்திற்கும் (Guinti Odeon Bookshop),உலகளாவிய இலக் கிய ஆதரவிற்கான விருதினை பொலானா குழந்தைகள் புத்தகக் கண்காட்சிக்கு (Bologna Children’s Book Fair) முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, மக்களவை உறுப்பினர்கள் சசி தரூர், டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் கள், அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் ஹிடோஸி ப்ருக்ஸ்மா, இத்தாலி பொ லோனியா புக் ப்ளஸ் இயக்குநர் ஜாக்ஸ் தாமஸ், தமிழ்நாடு பாடநூல்- கல்வியி யல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக் கல் ஐ.லியோனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நோபல் பரிசை வெல்வதை இலக்காகக் கொள்க!
தமிழக எழுத்தாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் பதிவிட்டிருப்பதாவது: சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025 உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும் - இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் தனித்துவமான இந்த முன்னெடுப்பு புதிய மைல்கற்களை அடைந்துள்ளது. 2023-இல் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடங்கி, 2024-இல் 752 என வளர்ந்து, தற்போது 2025-ஆம் ஆண்டில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (தமிழில் இருந்து அயலக மொழிகளுக்கு 1005, அயலக மொழிகளில் இருந்து தமிழுக்கு 120) மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சாதனைக்கும், தமிழிலக்கியம் உலக அளவில் கவனம் பெறவும் நமது அரசின் மொழிபெயர்ப்பு நல்கையும் ஆதரவும்தான் காரணம் எனத் தமிழ் அறிவுலகம் பாராட்டுகிறது. ஞானபீடம் அல்ல, நம் எழுத்தாளர்கள் நோபல் பரிசே பெற உயர்வுள்ளுவோம்!.