tamilnadu

img

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை அடிப்படையிலேயே குறைபாடு கொண்டது

சென்னை, ஜன.18- சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி சனிக்கிழமையன்று (ஜன.18) நடைபெற்ற திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாட்டை துரைமுருகன் தொடங்கி வைத்தார்.  இந்த மாநாட்டில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் பேசியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் கோட்பாட்டில் அடிப்படையிலேயே குறை பாடு உள்ளது.  ஒன்றியங்களை சிதைத்து ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே  நாடு,ஒரே மதம், ஒரே மொழி,  ஒரே கட்சி என்பதை கொண்டு  வர முயற்சி செய்கிறார்கள். இதை இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்திய குடியரசின் ஜனநாயக பணிகளின் அடிப்படை கூறுகளை சிதைக்கும் முயற்சி தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்றும் அவர் கூறினார். தேர்தல் செலவு அதிகரிக்கும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி,” ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்தால் தற்போது ஆகும் தேர்தல் செலவை விட மூன்று மடங்கு கூடுதலாக செலவு ஆகும். அத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒரு கோடி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுப்பு தேவைப்படும். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் விலை 35 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. எனவே ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தும் போது  கூடுதல் செலவு ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும்,” என்றார். இந்த நிகழ்ச்சியில் ‘இந்து’ நாளிதழ் என்.ராமு, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி,தங்கம் தென்னரசு,மா. சுப்பிரமணியன் மற்றும் திமுகவின் அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ். பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவின் சட்ட பிரிவின் உறுப்பினர் கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.