திருச்சிராப்பள்ளி, ஜன.18 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சி யில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ஏ.பாரதி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஏ.சாலமன் வரவேற்றார். வரவு - செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் எம்.சீனிவாசன் சமர்ப்பித் தார். கடந்த கால நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பொதுச் செயலாளர் மாரிமுத்து சிறப்புரையாற்றி னார். சாலை ஆய்வாளர்கள் சங்க பொதுச் செயலாளர் குருசாமி வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில், “நெடுஞ்சாலைத் துறை யில் பட்டய பொறியாளர்கள் பணியி டத்தை பாதுகாக்க கோரி கையெழுத்து இயக்கம் நடத்துவது. டிப்ளமோ கல்வித் தகுதி உள்ள பணியிடங்களை, பணியி டங்களான இளநிலை வரை, தொழில் அலுவலர் (ஜே.டி.ஒ) மற்றும் இளநிலை பொறியாளர் (ஜே.இ) பணியிடங்களை டிப்ளமோ கல்வித் தகுதி உள்ளவர்கள் மட்டும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இளநிலை பொறியாளர்களுக்கு 5 ஆண்டுகளின் பணி அனுபவத்தில் உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் முதன்மை இயக்குநர் பணியிடம் ஐஏஎஸ் நிலையில் உருவாக்க வேண்டும். டிப்ளமோ கல்வித் தகுதி உள்ள சாலை பணியா ளர்களுக்கு உதவி வரைவாளர் பணியிடத்தை துறையில் அதிகப்படுத்தி பதவி உயர் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநிலத் துணைத் தலைவர் ராஜமுனியாண்டி நன்றி கூறினார்.