tamilnadu

img

முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஒன்றிய அரசு, காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது!

முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஒன்றிய அரசு,  காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யும் அரசு, சிறு குறு நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கே ஒன்றரை லட்சம் கோடி கடன் வழங்கு வதாக கூறுகிறது” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் கடுமையாக விமர்சித்தார். மதுரையில் ஏப்ரல் 2-6 வரை நடை பெறும் சிபிஎம் 24-ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி, குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் திறந்தவெளி கருத்த ரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயலா ளர் ஆர்.செல்லசுவாமி தலைமையில் மார்ச் 22 சனியன்று நடந்த கருத்தரங் கில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ் பேசினார்.

கார்ப்பரேட் லாபம் அதிகரிக்க, மக்கள் வாங்கும் சக்தி குறைவு

“தொழில் வந்தால் மட்டும் வளர்ச்சி ஏற்பட்டுவிடாது. இந்தியாவில் இதுவரை  இல்லாத அளவில் கடந்த 15 ஆண்டு களில் கார்ப்பரேட்டுகளின் லாபம் உச்சம் தொட்டிருக்கிறது என இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கி றது. கடந்த ஆண்டு லாபம் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மக்க ளின் வாங்கும் சக்தி குறைந்திருக்கி றது. வேலை வாய்ப்பில் முன்னேற்றம்  ஏற்படவில்லை என குறிப்பிடப் பட்டுள்ளது,” என்று சுட்டிக்காட்டினார்.

தேர்தலில் வேலையின்மை பிரச்சனையை மறைத்த ஆட்சியாளர்கள்

“2024 நாடாளுமன்றத் தேர்தலின் போதுகூட இந்தியாவில் வேலையின்மை ஒரு பிரச்சனை என்பதாக பாஜக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பொருளா தார ஆய்வறிக்கையில் வேலையின்மை மிக அதிகமாக மாறியுள்ளது என்பதை குறிப்பிடுகிறார்கள்,” என்றார் கனகராஜ். காலி பணியிடங்களை  நிரப்பாத அரசு “வேலையின்மையை போக்க முதலாளிகளுடன் இணைந்து 5 திட்டங்க ளை உருவாக்க உள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கு வார்களாம். ஆனால் ஒன்றிய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களையும், ரயில்வேயில் 3 லட்சம் காலிப் பணியிடங்களையும் நிரப்ப மாட்டார்களாம்,” என்று அவர் தெரி வித்தார். “ஒரு லட்சத்து 70 ஆயிரம் பணி யிடங்கள் பாதுகாப்புத்துறையில் நிரப்பப்படாமல் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் 6 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப மாட்டார்களாம். மாறாக வேலை வாய்ப்பு  வழங்கும் முதலாளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை செயல் படுத்துவார்களாம்,” என்று விமர்சித்தார். தொழில் வளர்ச்சி குறித்த அவதானிப்பு “தமிழ்நாட்டில் தொழில்வழித் தடங்கள் உருவாக்கப்படுகின்றன. திரு நெல்வேலி-தூத்துக்குடி தொழில் வழித்தடம் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. அது வெற்றி பெற வேண்டும். ஆனால், லாபம் எங்கு அதிகம் கிடைக்கிறதோ அதை நோக்கி மூலதனம் செல்லும். அது மூலதனத்தின் இயல்பு. பின் தங்கிய பகுதிகளுக்கும் மூலதனம் செல்ல வேண்டும். அதற்கேற்ற திட்ட மிடல் வேண்டும்,” என்றார். குமரியில் மன்னிப்பு  கேட்க வேண்டும் “கோடிக்கணக்கான பணத்தில் மேம்பாலம் கட்டிவிட்டு கனரக வாகனம் பாலத்தில் செல்ல வேண்டாம் என அறி விப்பு செய்யப்பட்டுள்ளது. அதே பகுதி யில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் பெல்லார்மின் நிதி ஒதுக்கீட்டில் கட்டிய பாலம் தரமாகவும் உறுதியாக வும் உள்ளது. ஒன்றிய அமைச்சரால் கட்டப்பட்ட பாலத்தில் கனரக வாகனம் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிச லும் விபத்துகளும் அதிகரித்துள்ளது. இதற்காக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்,” என்று வலியுறுத்தினார். நிதி அமைச்சர்  குறித்த விமர்சனம் “ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அண்மையில் கோவையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சிறு குறு தொழில்களுக்கு 20 லட்சம் பேருக்கு முந்ரா கடன் கொடுத்ததாக தவறான புள்ளிவிவரத்தைக் கொடுத்தார். அதே விவரம் அவரது நாடாளுமன்ற குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது. நிதி அமைச்சர் நேர்மையாக பேசுபவர் அல்ல,” என்று கடுமையாக சாடினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை, சிறு தொழில்களுக்கு குறைந்த கடன் “ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சிறுகுறு தொழில்களுக்கு 5 ஆண்டுக ளில் கொடுப்பதாக அமைச்சர் தெரிவித் துள்ளார். அதாவது ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி. கடன் வரம்பை 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தி இருப்பதாகவும் அறிவித்தார். இந்தியா முழுவதும் 5 கோடியே 70 லட்சம் பேர் சிறுகுறு தொழில் செய்கிறார்கள் என்பது ஒன்றிய அரசின் கணக்கு. சிறு குறு நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கே ஒன்றரை லட்சம் கோடி கடன் என்று சொல்லும் அரசு, பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்கிறது,” என்று அவர் கவலை தெரிவித்தார். முதலாளித்துவ  நலன்தான் தேச நலனா?  “பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்களை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கொடுக்கிறார்கள். இவை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப் பட்டவை. தொழில்வளர்ச்சி குறித்து மாற்றுத்திட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் முன்வைக்கிறோம். தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பதில்லை. முத லாளித்துவ நலன்தான் தேச நலன் என்று வாதிடுகிறார்கள்,” என்று எச்சரித்தார். தொழிலாளர்  நலன் குறித்த கவலை “அரசுத்துறையில்கூட பாதுகாப்பான வேலை இல்லை. போக்குவரத்து கழ கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்க ளுக்கு உரிய நேரத்தில் பணப்பயன்கள் கிடைப்பதில்லை. தமிழக அரசு உடனடி யாக தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வு கால பயன்களை வழங்க வேண்டும்,” என்ற கோரிக்கையுடன் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.