‘குடும்ப ஓய்வூதியத்திலிருந்து மாநாட்டு நிதி’
தருமபுரியை சேர்ந்த எஸ்.ரத்தினம்மாள் (88). இவரது கணவர் கே. சாமுண்டி (லேட்) இவர் திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியராக பணியாற்றியவர் சிஐடியுவில் பணியாற்றியவர். ரத்தினம்மாள் சிபிஎம் அகில இந்திய மாநாட்டிற்கு தனது பங்களிப்பாக ஓய்வூதியத்தில் இருந்து ரூ. 5 ஆயிரத்தை, சிபிஎம் தருமபுரி நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா உள்ளிட்டோரிடம் வழங்கினார்.