சென்னை,மார்ச்.25- பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி (60) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இவர் கராத்தே மட்டுமின்றி இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் வில் வித்தையும் கற்றுக்கொடுத்துள்ளார். தமிழகத்தில் வில்வித்தையில், ‘ரீகர்வ் வில் (1979)’, ‘காம்பவுண்ட் வில் (1980)’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஷிஹான் ஹுசைனி தான் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
இவர் சில நாட்களுக்கு முன்பாக உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.