புதுதில்லி,மார்ச்.25- உத்தரப்பிரதேச அரசின் புல்டோசர் அரசியலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கணவனை இழந்து குழந்தைகளுடன் வசிக்கும் 2 பெண்களின் வீடுகள், சிறுபான்மை வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளை யோகி ஆதித்தியநாத் அரசு இடித்துத் தள்ளிய சம்பவம் மனசாட்சியை உலுக்கும் விதமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல், நோட்டீஸ் கொடுத்த 24 மணிநேரத்தில் 5 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ள உச்சநீதிமன்றம், அங்கு வீடுகளை மீண்டும் கட்ட அனுமதி அளிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன் உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கை நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்குவதாகவும் கூறியுள்ளது. அவர்களை மேல்முறையீடு கூட செய்ய அவகாசம் கொடுக்காமல் வீடுகளை இடிப்பதா என உச்சநீதிமன்றம் கேள்வி.
வீடுகளை இடிக்கும்போது ஒரு சிறுமி மட்டும் இடிபாடுகளுக்குள் சென்று தனது புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.