சென்னை,மார்ச்.25- மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையை மறைக்கும் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்.
சென்னை தரமணி அரசு தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையை மறைத்து, நடவடிக்கை எடுக்காமல் டிசி கொடுத்து அனுப்பிய கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை காவல்துறை தடுக்க வேண்டுமென்றும், இச்சம்பவம் தொடர்பாகக் கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்திவருகின்றனர்.