9,200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழாவில் பயனடைந்த கர்ப்பிணித் தாய்மார்கள், தமிழக முதல்வருக்கு, நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: பெண்கள் நலன் காக்கும் உன்னதமான திட்டமான சமுதாய வளைகாப்பு விழா எல்லோராலும் போற்றப்படுகிற திட்டமாகும். சமுதாய வளைகாப்பு விழாவிற்கு 16 வட்டாரங்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில், 2021-2022 ஆம் ஆண்டு ரூ.9 லட்சம், 2022-2023 -இல் 9 லட்சம், 2023-2024 -இல் 4 லட்சம், 2024-2025 -இல் 4 லட்சம் ஆக மொத்தம் ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 9,200 கர்ப்பிணி பயனாளிகள் பயனடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா தஞ்சாவூர் மாவட்டத்தில், 16-வட்டாரங்களிலும் செயல்படும் 1,749 அங்கன்வாடி மையங்களிலும் பதிவு செய்யப்பட்டு, இணை உணவு பெற்று பயன் அடையும் 400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தாம்பூழம் தட்டுடன் கூடிய பூமாலை, வளையல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவற்றுடன் அனைவருக்கும் மதிய உணவு வகைகளாக எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல், புதினா துவையல், ஊறுகாய், சிப்ஸ், அரிசி வடகம் ஆகியவை வழங்கப்பட்டன என தெரிவித்தார்.
காச நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி
ய்த் தடுப்பு மருந்து துறையின் சார்பில், காச நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை பாலக்கரையில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி, சங்குப்பேட்டை வரை சென்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் 200–க்கும் மேற்பட்ட காசநோய் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்டு, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் பதாகைகளை ஏந்திக்கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர்(காசநோய்) மரு.ரா. நெடுஞ்செழியன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. கலா, நிலைய மருத்துவ அலுவலர் மரு. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.