tamilnadu

இந்தியாவில் சட்டவிரோத துப்பாக்கி கலாச்சாரம் வலதுசாரி கும்பலுக்கு சிறப்பு அனுமதியா?

இந்தியாவில் சட்டவிரோத துப்பாக்கி கலாச்சாரம் வலதுசாரி கும்பலுக்கு சிறப்பு அனுமதியா?

2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக அரசு அமைந்த பிறகு, இந்தியாவில் துப்பாக்கி கலாச்சாரம் அபாயகர மான அளவில் அதிகரித்துள்ளதை ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இந்த ஒப்புதலுக்குப் பின்னால் மறைக்கப்பட்டுள்ள பேரழிவுகரமான உண்மைகள் என்ன? யாருக்காக இந்தச் சட்ட விரோத ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன? சில  குறிப்பிட்ட அமைப்புகளுக்கு மட்டும் இதில் சலுகை வழங்கப்படுகிறதா? என்ற கேள்விகள் முக்கிய மானவை. 

உச்சநீதிமன்ற வழக்கும் -  ஒன்றிய அரசின் ஒப்புதலும்  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ராஜேந்திர சிங் எதிர் உ.பி. அரசு (Rajendra Singh vs. State of Uttar Pradesh (SLP(CRL) NO.12831/2022) வழக்கில், இந்தியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோதத் துப்பாக்கிகள் தொடர்பாக நீதிபதிகள் தன்னிச்சையாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் 14-09-2023 அன்று தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் ஒரு திடுக்கிடும் உண்மையை ஒப்புக்கொண்டது. “2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் எண்ணிக்கை, தேசிய குற்ற ஆவணக்காப்பகத் தரவுகளின்படி அதிகரித்துவரும் போக்கைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தது.  இதன் தொடர்ச்சியாக, 08-08-2025 அன்று உள்துறை அமைச்சகம் (No.V-11026/08/2023-Arms)  ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. அதன்படி, பி.பி.ஆர் & டி (BPR&D) இயக்குநர் தலைமையில் ஒரு  நிபுணர் குழு அமைக்கப்பட்டு, இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன. மர்மமான மூன்று ஆண்டுகள்: 2014-2016  பாஜக அரசு பொறுப்பேற்ற முதல் சில ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளை உற்றுநோக்கி னால் பெரும் மர்மம் புலப்படுகிறது. 03-03-2015 அன்று மக்களவையில் தற்போதைய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் எழுப்பிய கேள்விக்கு, அப்போதைய இணை  அமைச்சர் ஹரிபாய் சௌத்ரி பதிலளிக்கையில், 2011 முதல் 2014 ஆகஸ்ட் வரை சுமார் 20,351 சட்ட விரோதத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறினார்.  ஆனால், 2014-ன் முழுமையான தரவுகளோ அல்லது 2015, 2016 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப் பட்ட துப்பாக்கிகள் குறித்த புள்ளிவிவரங்களோ அரசிடம் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்டபோது, “2014 முதல் 2016  வரை பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கி கள் தொடர்பாகப் பிரத்யேகத் தகவல்கள் இல்லை” என்று தேசிய குற்ற ஆவணக்காப்பகம் பதிலளித்துள் ளது. பாஜக ஆட்சி அமைந்த முதல் மூன்று ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் என்னவாயின? அவை கள்ளச்சந்தையில் மீண்டும் விற்பனை செய்யப்பட்டனவா? இந்த மௌனம் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.  அதிரவைக்கும் புள்ளி விவரங்கள்: 2017-2023  தேசிய குற்றப் பதிவு காப்பகம் (NCRB)  வெளியிடும் ‘Crime in India’ அறிக்கையின்படி, 2017 முதல் 2023 வரை பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளின் புள்ளிவிவரம் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்குகிறது.  பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் மற்றும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்டவை வெறும் 33,602 துப்பாக்கிகள் மட்டுமே. ஆனால், “மற்றவர்கள்” என்று வகைப்படுத்தப்பட்ட பொதுவெளியில் உலாவும் நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை 5,09,926 துப்பாக்கிகள். ஒட்டுமொத்தமாக 5,43,528 சட்டவிரோதத் துப்பாக்கிகள் பிடிபட்டுள்ளன. அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 70,000 சட்டவிரோதத் துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளன. இதன் பொருளாதாரப் பரிமாணம் மட்டும் சுமார் 1,087 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.  காவல்துறையை மிஞ்சும் தனியார் ஆயுத வலிமை  2023-ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியாவில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போர் எண்ணிக்கை 37,51,127. இதில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்தகாவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் (CRPF, BSF, ITBP போன் றவை) மொத்த எண்ணிக்கை  37,94,980. நாட்டின் ஒட்டு மொத்த பாதுகாப்புப் படை யினரின் எண்ணிக்கையும், தனியார் வசம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும் சூழலில், ஆண்டு தோறும் பிடிபடும் 70,000 சட்டவிரோதத் துப்பாக்கி களையும் கணக்கில் சேர்த்தால்,  காப்பு யாருடைய கையில் இருக்கிறது என்ற அச்சம் எழுகிறது.  மதம் சார்ந்த பாரபட்சம் மற்றும் வன்முறை  சட்டவிரோத ஆயுதங் களுக்கு எதிராகத் தீவிர  விசாரணை நடத்தப்படுவ தாக ஒன்றிய அரசு கூறி னாலும், நடைமுறையில் மதம் சார்ந்த பாரபட்சம் தெரிகிறது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது உபா (UAPA ) சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் தேசிய புலனாய்வு  முகமை (NIA), வலதுசாரி அமைப்பினர் மற்றும் பசுக் குண்டர்கள்  மீது அத்தகைய நடவடிக்கையை எடுப்ப தில்லை.  இந்துத்துவ அமைப்பி னர் மற்றும் பசுப் பாதுகாப்பு குழுவினர் சட்டவிரோதத் துப்பாக்கிகளோடு வலம் வருவதும், தேசிய நெடுஞ் சாலைகளில் வாகனங்களை அச்சுறுத்திச் சோதனை செய்வதும் அன்றாட நிகழ் வாகிவிட்டது. சமூக வலை தளங்களில் தாங்கள்  துப்பாக்கி வைத்திருப்ப தைப் பெருமையுடன் பதி விடுகின்றனர். இவர்களைக் கண்காணிக்க வேண்டிய உள்துறை அமைச்சகத்தின் பிரிவுகள் ஏன் மௌனம் காக்கின்றன? இது தற்செ யலானதா அல்லது திட்ட மிட்ட அலட்சியமா?  எழும் கேள்விகளும் அவசரத் தேவையும்  பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கி களை அழிப்பது (Disposal) குறித்த எந்தத் தரவுகளும் அரசிடம் இல்லை என்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்.  * ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்க மிடும் நபர்கள் சட்டவிரோதத் துப்பாக்கிகளைப் பயன் படுத்த ஆயுதச் சட்டம் அனுமதிக்கிறதா?  *வலதுசாரி அமைப்பு களுக்குச் சட்டவிரோத ஆயு தங்களை வைத்திருக்கத் தனிச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளதா?  * 2014-2016 காலகட்டத் தரவுகள் மறைக்கப்பட்டதன் உண்மைப் பின்னணி என்ன?  ஒன்றிய அரசு போர்க் கால அடிப்படையில் சட்ட விரோதத் துப்பாக்கி கலாச் சாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக, வடக்கு மற்றும் மத்திய மாநி லங்களில் உள்ள வலதுசாரி அமைப்புகளிடம் இருக்கும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். பறி முதல் செய்யப்பட்ட ஆயுதங் களை முறையாக அழிப்ப தற்கான கண்காணிப்பு நடை முறையை உருவாக்க வேண்டும். இல்லையேல், போலி “தேசபக்தர்களின்” கைகளில் இருக்கும் இந்தச் சட்டவிரோத ஆயுதங் களால் இந்தியா ஒரு மிகப் பெரிய மனிதப் பேரழிவைச் சந்திக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.