சென்னை, ஜன. 24 - வேங்கைவயல் குடிநீர்த் தொட்டி யில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்ப வத்தில், 3 பேர் மீது, ஜனவரி 20 அன்று குற்றப்பத்திரிகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. பாதிக் கப்பட்ட பிரிவினரையே குற்றவாளிகள் ஆக்கும் முயற்சி இது! என்றும், இதனைக் கைவிட்டு, வழக்கை சிபிஐ விசார ணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி யுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம், கடந்த 2022 டிசம்பர் 26 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்ன துரைக்கு இந்த தகவல் கிடைத்ததும், அவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புக்களும் போராட்டம் நடத்தின. இந்த பின்னணியில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. எனினும், இரண்டாண்டுகளைக் கடந்தும் விசார ணையில் முன்னேற்றமில்லை. குற்ற வாளிகள் கண்டறியப்படவில்லை. இது காவல்துறை மீதும், தமிழக அரசு மீதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, வேங்கைவயல் கிரா மத்தில் நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜ்கமல், மார்க்ஸ் ரவீந்தி ரன் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளில் ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் ஆஜராகி, ‘இதுவரை 389 சாட்சிகளி டம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரல் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி அமர்வில் வெள்ளிக்கிழமை யன்று வழக்குகள் மீண்டும் விசார ணைக்கு வந்தன. அப்போது, சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலை மை வழக்கறிஞர் ரவீந்திரன், “வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகி யோருக்கு எதிராக ஜனவரி 20 அன்று புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கை வயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் அதனை உண்மையாக்குவதற்காக குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் மனிதக் கழிவைக் கலந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்றும் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த அறிக்கை யையே பிரமாண மனுவாகவும் தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிற்பகலில் நடைபெற்ற விசாரணை யின் போது, மனுதாரர்களில் ஒருவர், குற்றப்பத்திரிகையில் வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு விரிவான விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மற்றொரு மனுதாரர், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது சரியானதே என்று வாதிட்டார். “நீதிமன்றத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யக்கூடாது” என்று மனு தாரர்களை கண்டித்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அரசின் அறிக்கைக்கு மார்ச் 10-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசார ணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில், தமிழக காவல்துறை யின் இந்த குற்றப்பத்திரிகைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
தொல். திருமாவளவன் எம்.பி.
“உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறி வுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு விடுமோ என்ற அய்யத்தில், உண்மை யான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. எனவே, தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
‘சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய இவ்வழக்கை ஒன்றிய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.