இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி வேட்பாளர் மனுத்தாக்கல்
பாபநாசம், ஏப். 5- திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஷாஜஹான், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரனிடம் சனிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக, பாபநாசம் அரசு மருத்துவமனை அருகிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதில் திமுக எம்.பி கல்யாண சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ-வும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான ரெங்கசாமி, திமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் அய்யாராசு, துரைமுருகன், அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கலைச்செல்வன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் உட்பட திராவிடர் கழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
