tamilnadu

img

சர்வதேச இளையோர் பாய்மரப் படகு போட்டி 6 தங்கம் வென்று இந்தியா சாதனை

சர்வதேச இளையோர் பாய்மரப் படகு போட்டி 6 தங்கம் வென்று இந்தியா சாதனை

சென்னை, ஜன.11 - சென்னை துறைமுகத்தில் ஜனவரி  6 முதல் 9 வரை தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற இந்திய சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பி யன்ஷிப்- 2026 போட்டிகளில் இந்தியா முதலிடம் வென்று சாதனை படைத்தது.  இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்திய சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன் ஷிப் - 2026 போட்டி சென்னை துறை முகத்தில் ஜன. 6 முதல் 9 வரை பல்வேறு வகையிலான பாய்மர படகுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் இந்தியா, இங்கி லாந்து, இலங்கை, சீசெல்ஸ், மொரி சியஸ், மலேசியா, அயர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த 12 வயது முதல் 18 வயது வரையி லான 87 படகோட்டும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டி களில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 27 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகளில் இந்திய அணி 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என  மொத்தம் 12 பதக்கங்களுடன் முத லிடம் பிடித்தது. அயர்லாந்து ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களையும், மலேசியா ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது. இதுவரை பாய்மரப் படகுப் போட்டிகளை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து ரசித்த சென்னை மக்க ளுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இந்த போட்டி நீங்காத நினைவுகளை அளித்தது. இப்போட்டியில் தமிழ்நாட்டு வீரர் கிருஷ்ணா வெங்கடாசலம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை நேத்ரா, வீரர்கள் வருண் மற்றும் கணபதி ஆகிய மூன்று  பேரும் ஒலிம்பிக்ஸ் சைலிங் போட்டி யில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இவர்கள் மூவரும் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில், இந்திய சர்வதேச இளை யோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் - 2026 போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் அணி வித்து பாராட்டு தெரிவித்தார்.