இந்தியாவின் புதிய மீன்வளக் கணக்கெடுப்பு பாரம்பரிய மீனவச் சமூகங்களின் அடையாளம் அழியும் அபாயம்!
புதுதில்லி ஒன்றிய பாஜக அரசு ‘ஐந்தாவது தேசிய கடல் மீன்வளக் கணக்கெடுப்பு 2025’-ஐ முடித்துள்ளது. இந்தியாவின் கடல் மற்றும் கடற்கரை வளங்களைப் பயன்படுத்தும் ‘நீலப் புரட்சி’ (Blue Revolution) திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு சாகர்மாலா போன்ற துறைமுக மேம்பாட்டுத் திட்டங்களுடன் இணைந்தது என கூறப்படுகிறது. ஒன்றிய மீன்வளத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன், 2025 அக்டோபர் 31 அன்று ஐசிஏஆர்-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில், 2025 தேசிய கடல் மீன்வளக் கணக்கெடுப்பின் வீட்டுக் கணக்கெடுப்புப் பகுதியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தியாவின் 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்க ளில் உள்ள சுமார் 12 லட்சம் மீனவக் குடும்பங்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் பற்றிய விரிவான தகவல்களைச் சேகரிப்பதே இதன் முதன்மை நோக்கமாக உள்ளது. மீனவர்களுக்காக ஒன்றிய அரசு வழங்கும் திட்டங்களான பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா, மீனவர்களுக்கான கிசான் சம்ரிதி திட்டம் போன்றவற்றின் பலன்கள் தகுதியுள்ள மீனவர்களுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய இந்தக் கணக்கெடுப்பு உதவு கிறது. இதில் பதிவு செய்யும் மீனவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் அரசு நிதி உதவி மற்றும் காப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்தக் கணக்கெடுப்பு முழுவதுமாக காகிதம் இல்லாமல், பிரத்யேக மொபைல் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. மீன்பிடிப் படகுக ளைத் துல்லியமாகக் கணக்கிட ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கணக்கெடுப்பில் ஒவ்வொரு மீனவக் கிராமமும், உள்கட்டமைப்புகளும் வரை படத்தில் குறிக்கப்படுகின்றன. மீன்பிடித் துறை முகங்கள், குளிர்பதனக் கிடங்குகள் (Cold Storage), மீன் ஏலக் கூடங்கள் மற்றும் ஐஸ் தொ ழிற்சாலைகளின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொண்டு, எங்கு புதிய வசதிகள் தேவை என்பதைத் தீர்மானிக்க உதவும் வகை யில் இது கணக்கெடுப்பில் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மீனவர்களின் வருமானம், கடன் சுமை, கல்வி நிலை மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று அவர்களது வாழ்வாதாரத்தை எப்படிப் பாதித்தது போன்ற நுணுக்கமான தகவல்கள் இதில் சேகரிக்கப்படுகின்றன. முன்பு மனிதர்கள் நேரடியாகச் சென்று சேகரித்த தரவுகளுக்குப் பதிலாக, இப்போது தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மொபைல் செயலிகள் மற்றும் டிரோன்கள் (Drones) மூலம் தகவல்கள் சேகரிக்கப்படு கின்றன. மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களில் உள்ள உள் கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 1960 களில் இந்தியாவில் 88 சதவிகிதம் மீன்பிடித் தொழில் பாரம்பரிய முறையிலேயே நடந்தது. ஆனால், 2025 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, தற்போது 52 சதவிகித மீன்கள் பெரிய விசைப்படகுகள் மூலமே பிடிக்கப்படுகின்றன. பாரம்பரியச் சிறுதொழில் மீனவர்களின் பங்கு வெறும் 1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. அதேபோல், கடலில் மீன் பிடிப்பதை விட, பண்ணைகளில் மீன் வளர்ப்பது (Aquaculture) தற்போது 75 சத விகித லாபத்தைத் தருகிறது. இது செல்வந்தர்க ளுக்கும், நிலம் வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே சாதகமான தொழிலாக அமைந் துள்ளது. தற்போது இந்தக் கணக்கெடுப்பு முறையினால் பாரம்பரிய மீனவர்கள் பல காரணங்களால் விடுபடுகின்றனர். அதாவது பண்ணை மீன் வளர்ப்பு, துறைமுக கட்டுமானத்திற்காக வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் வாழ்வா தாரம் இழந்த மீனவர்கள், பகுதிநேரத் தொழிலா ளர்களாக மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர் கின்றனர். மீன்பிடித் தடை காலங்களில் அவர்கள் ஊரில் இருப்பதில்லை. இந்தக் கணக்கெடுப்பு பெரும்பாலும் பதிவு செய்யப்பட்ட மீனவர் சங்கங்கள் மற்றும் பெரிய விசைப்படகு உரிமையாளர்களின் தரவுகளை மட்டுமே நம்பியுள்ளது. இதனால் அமைப்புசாரா நிலையில் இருக்கும் ஏழை மீனவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. 90 சதவிகித மீனவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாலும், கல்வியறிவு கிடைக்காத வர்களாக இருப்பதாலும் டிஜிட்டல் முறை யிலான கணக்கெடுப்பில் அவர்கள் புறக்கணிக் கப்படும் வாய்ப்பே அதிகம் உள்ளது. அரசாங்கம் ‘மீன் பிடிப்பவர்களை’ மட்டுமே மீனவர்களாகக் கருதுகிறது. ஆனால், மீனவர் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, அது ஒரு சமூக அடையாளமாகவும் உள்ள நிலை யில் இவர்களை பொருளாதார நோக்கில் இருந்து மட்டும் அணுகக்கூடாது என கோரிக்கை கள் எழுந்துள்ளது. ‘சாகர்மாலா’ போன்ற திட்டங்களுக்காகச் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் படுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய பெரிய திட்டங்களால் மீனவர்கள் எந்த ஒரு போதுமான மறுவாழ்வு திட்டங்க ளும் இன்றி தங்கள் நிலங்களை விட்டு வெளியேற்றப்படும் அபாய நிலை தான் நிலவுகிறது. பாரம்பரிய மீனவர்களின் வாழ்விடங்களை யும், சந்தைகளையும் ‘பாரம்பரியப் பகுதிகள்’ அல்லது ‘சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்க ளாக’ அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால், தற்போதைய 2025 கணக்கெடுப்பு, மீனவர்களின் பாரம்பரிய அடையாளத்தையும், அந்த நிலத்தின் மீதான அவர்களது உரிமையையும் முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
