ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இறுதியில் இந்தியாவின் லக்சயா சென்
பிரபல சர்வதேச பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான, ஆஸ்திரேலிய ஓபன் தொட ரின் 34ஆவது சீசன் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி சனிக்கிழமை அன்று காலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்சயா சென், சீன தைபேவின் டி.சி.சோ-வை எதிர்கொண்டார். தொடக்கத்தில் லக்சயா சென் திணறிய நிலையில், முதல் செட்டை 17-21 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகை யில் 2ஆவது செட்டில் மீண்டெழுந்த லக்சயா சென் அதிரடியாக விளை யாடி கடைசி 2 செட்களையும் கைப்பற்றினார். இறுதியில் 17-21, 24-22, 21-16 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். இன்று இறுதி ஆட்டம் தொடர்ந்து ஞாயிறன்று காலை 9:30 மணியளவில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் லக்சயா சென், ஜப்பான் வீரர் யூசி தனாகவை எதிர்கொள்கிறார்.
ஆஷஸ் தொடர் ஹெட் மிரட்டல் சதம் ; முதல் டெஸ்டில் ஆஸி., அபார வெற்றி
பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரின் (கிரிக்கெட் உலகின் சாம்பல் யுத்தம்) நடப்பாண்டுக்கான சீசன் (2025-2026) ஆஸ்திரேலிய நாட்டில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. ஆஸ்திரே லியா - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே 5 போட்டி களைக் கொண்ட இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டி, ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அன்று காலை தொடங்கி யது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் (7 விக்.,) அசத்தலான பந்துவீச்சில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 32.5 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 172 ரன்களில் சுருட்டிய மகிழ்ச்சியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் (5 விக்.,) பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 45.2 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 40 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் போலந்து (4 விக்.,) - ஸ்டார்க் (3 விக்.,) - டோக்கெட் (3 விக்.,) ஆகியோரின் வேகக்கூட்டணியில் சிக்கி சின்னாபின்னமானது. இங்கிலாந்து 2ஆவது இன்னிங்சில் 34.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்ட மிழந்து, ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 205 ரன்கள் நிர்ணயம் செய்தது. எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்தி ரேலிய அணி தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் டி-20 போட்டி போல ருத்ரதாண்டவம் ஆடி குறைந்த பந்துகளில் சதமடித்து அசத்தினார். டிராவிஸ் ஹெட் (123 ரன்கள் - 83 பந்துகள்), மற்றொரு தொடக்க வீரர் ஜேக் (23) ஆட்ட மிழந்த பின்பு, லபுஸ்சாக்னே (51), ஸ்மித் (2) ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 எடுத்து, 8 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2 இன்னிங்சிலும் 10 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
