இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம்’
சென்னை: `THUG LIFE’ பட விழாவில் முதலில் `உயிரே, உறவே’ என தமிழில் வணக்கம் சொல்லிவிட்டு, இதற்கு மேல் இந்தியாவின் தொடர்பு மொழி யான ஆங்கிலத்தில் பேசுகிறேன் என ஆங்கிலத்தில் பேசினார் நடிகர் கமல்ஹாசன்.
நியோ மேக்ஸ் குழும சொத்துகள் முடக்கம்
நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டது. நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ் குழுமத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. கடந்த 2023 ஆம் ஆண்டு நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நியோ மேக்ஸ் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்துள்ளது. நியோமேக்ஸ் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை சொத்துகளை முடக்கியது.
கூட்டணி பற்றி தொண்டர்கள் பேசக் கூடாதாம்!
விழுப்புரம், ஏப்.18 - கூட்டணி பற்றியெல்லாம் தொண்டர்கள் எந்தக் கருத்தும் சொல்லக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்ட பாஜக தொண்டர்கள் சந்திப்புக் கூட்டம் செங்கல்பட்டு பகுதி யில் நடந்த நிலையில், நயி னார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய நயி னார் நாகேந்திரன், அதிமுக - பாஜக கூட்டணி வேண்டும் என நான் சொன்னது தற் போது நடந்துள்ளது. ஆன்மீகத் துக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்றுவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதுபோல, கூட்டணி குறித்து கட்சித் தலைமை பார்த்துக் கொள் ளும், முடிவு செய்யும். எனவே, கட்சித் தொண்டர்கள் தயவுசெய்து கூட்டணி குறித்து எதுவும் சொல்லாதீர்கள். அதுபோல கூட்டணி தொ டர்பாக சமூக வலைதளங்களி லும் தொண்டர்கள் எதுவும் எழுதக் கூடாது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து தொண்டர்கள் எந்தக் கருத்தும் பொதுவெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக நயினார் நாகேந் திரன் தெரிவித்துள்ளார்.