தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருப்பூர், அக்.22- தொடர் மழை பெய்து வருவதால் புத னன்று திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், சாலை கள், தெருக்கள் சேரும், சகதியுமாக காட்சிய ளிக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார கால மாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருவதால், திருப்பூர், ஈரோடு வழியாக கரூரில் நிறைவடையும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து புத னன்று அதிகரித்து காணப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகரப் பகுதிகளான அணைப்பா ளையம், அணைமேடு, சுகுமார் நகர், காசிபா ளையம் உள்ளிட்ட பகுதிகளில் நொய்யல் ஆற்றில் வழக்கமாக செல்லும் தண்ணீரை விட அதிகளவு தண்ணீர் சென்றது. வழக் கத்தை விட தண்ணீர் அளவு அதிகமாக சென்ற நிலையிலும் ஆபத்தை உணராமல் திருப்பூர் அணைப்பாளையம் மற்றும் அணைமேடு பகு திகளில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தூண்டில் போட்டும், வலை விரித்து மீன் பிடித்தனர். நிரம்பி வரும் அணைகள்: உடுமலை வனப்பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப் பரித்து சென்றது. வெள்ளப்பெருக்கு காரண மாக அங்கு குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிக ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. 60 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 47.58 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், அமராவதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1227 கன அடி தண் ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 90 அடி உயரம் கொண்ட இந்த அணையில், புதனன்று காலை நிலவரப்படி 74.12 அடியாக தண்ணீர் உள்ளது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து திடீ ரென அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை யொட்டி அணைக்கு வரும் நீர்வரத்தை அலு வலர்கள் கண்காணித்து வருகின்றனர். அதே போல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை: திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதை யடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே உத்தரவிட் டார். கொட்டும் மழையில் துப்புரவுப் பணி: திருப்பூர் மாநகரில் தினசரி 750 டன் குப்பை கள் அகற்றப்பட்டு வருகின்றன. திங்களன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலை யில், அனைத்து வீதிகளிலும் பட்டாசு குப்பை கள் மலைபோல் குவிந்துள்ளன. தொடர் மழை காரணமாக தூய்மைப் பணியாளர்க ளால் முழுமையாக குப்பையை அகற்ற முடி யவில்லை. இருந்த போதிலும் முடிந்த அள வுக்கு மழையில் நனைந்தபடி குப்பை அள் ளும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடு பட்டனர். பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்: ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டில் மின் சுவிட்சுகள் ஆன் செய்யும் போது கவனத்துடன் இயக்க வேண் டும். வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந் தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக்கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லை என்றால் அரு கில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின் சாரம் எடுக்க வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள் கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதி களுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். சாலைகளிலும், தெருக்களி லும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங் களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் தண்ணீ ரில் நடப்பது, ஓடுவது, விளையாடுவது மற் றும் வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண் டும். தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின் சேவைகள், மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தா லோ, மின்கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ சேவைமையமான மின் னகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள் ளனர்.
