tamilnadu

வன உரிமையைப் பறிக்கும் கொடூரச் சட்டத் திருத்தம்!

சென்னை, ஜன.11- தமிழ்நாடு வனச்சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட  மசோதாவை வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, சனிக்கிழமை (ஜன.11) சட்டப்பேரவையில் தாக் கல் செய்தார்.   இதனை அறிமுக நிலையிலேயே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடு மையாக எதிர்த்தது.  வன நிலங்களை வேறு பணிக ளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று  சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் டுள்ளது. மலைப்பகுதிகளில் வாழும்  ஆதிவாசி மக்களுக்கு கட்டமைப்பு வசதிகளை செய்துதர வன நிலங் களை பயன்படுத்தலாம் என்பது 2006 வன உரிமைச் சட்டம் வழங்கி யுள்ள உரிமையாகும். ஆனால், வன  நிலங்களை வேறு பணிகளுக்கு பயன்  படுத்தக்கூடாது என்ற சட்டத் திருத்தம்  வன உரிமைச் சட்டத்திற்கு எதிரான தாகும். இதேபோல் வனப் பரப்பளவை அதிகப்படுத்திட வனம் அல்லாத  நிலங்களை வனமாக அறிவித்திடும் உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கி சட்ட திருத்தம் செய்யப்பட்  டுள்ளது. பல தலைமுறைகளாக புறம்  போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை நிலத்திலி ருந்து அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்திடவே இந்த  சட்டத் திருத்தம் வழிவகுக்கும் என்ப தால் விவாதம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியது. கொடிய சட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பேசிய சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி,  “இந்தச் சட்டத்திருத்தம் வன நிலங்க ளில் வசித்துவரும் பழங்குடி, ஆதி வாசி மக்களை அப்புறப்படுத்த வழி வகுக்கிறது. இனி அந்த மக்களுக்கு பட்டா வழங்க முடியாது. மேலும், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பட்டாக்களையும் பறிக்கும் அபாயம் உள்ளது. ஒட்டுமொத்தமாக வனத் தில் வசிக்கும் மக்களின் வன உரி மையை அடியோடு பறிக்கிறது. இப்ப டியான ஒரு கொடிய சட்டத்தை முன்  மொழிந்ததே தவறானது” என்று கடு மையாக விமர்சித்தார்.

உள்நோக்கம்'

தொடர்ந்து பேசிய அவர், “எவ்  வித முன்னறிவிப்பும் இல்லாமல் அவ சர அவசரமாக அதுவும் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பே உறுப்பினர்களின் மேஜை யில் வைத்தது முற்றிலும் தவறான நடைமுறை” என்றும் மசோதாவை முன்கூட்டியே வழங்காமல் தவிர்ப்ப தில் உள்நோக்கம் இருப்பதாக சந்தே கப்பட வேண்டியிருக்கிறது” என்றும்  கூறினார். சபாநாயகர் விளக்கம் இதற்கு விளக்கம் அளித்த பேர வைத் தலைவர் மு. அப்பாவு, “உள்  நோக்கம் எதுவும் இல்லை. அதிகாரி கள் செய்த சிறிய தவறால் முன்கூட் டியே வழங்க முடியவில்லை. இனி வரும் காலங்களில் இந்த தவறு சரி  செய்யப்படும். முன்கூட்டியே வழங்கு வதற்கு அதிகாரிகளுக்கு உரிய அறி வுரைகள் வழங்கப்படும்” என்றார். ரத்து செய்ய வேண்டும் மீண்டும் பேசிய நாகை மாலி, “அரசு கொண்டு வந்திருப்பது கொடூர மான சட்டத்திருத்தம் என்பதால் விவா தத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது”  என்றும்; “ஆதிவாசி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான தமிழ்  நாடு வனத் திருத்தச் சட்டங்களை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்” எனவும் வலியுறுத்தினார். சிபிஐ, விசிக, தவாக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் சில  திருத்தங்கள் கூறினர். ஆனால், குரல்  வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறை வேறியதாக அறிவிக்கப்பட்டது.