ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்
கோவை, டிச.24- சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இன் டர்சிட்டி ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய காவலர் ஷேக் முகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவ லராக பணியாற்றி வரும் ஷேக் முகமது, பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்று திரும்பியுள்ளார். கடந்த சனியன்று சென்னையில் இருந்து கோவைக்கு வரும் இன்டர்சிட்டி ரயிலில் பயணித்த அவர், அதில் பயணித்த கோவையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியின் அருகே அமர்ந்துள்ளார். ரயில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஷேக் முகமது தூங்கு வது போல் நடித்து மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி, தனது செல்போனில் அவரது செயல்களை வீடியோ வாக பதிவு செய்தார். உடனடியாக ரயில்வே பாது காப்பு படை (RPF) காவலர்களுக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் ஷேக் முகமத்தை ரயிலில் இருந்து இறக்கி ஆர்பிஎஃப் காவலர்கள் விசாரணை நடத்தி னர். அதில், அவர் கோவை காவல்துறையைச் சேர்ந்த வர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலை யில், கோவை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து ஷேக் முகமத்தை பணியிடை நீக்கம் செய்துள் ளது.
வெள்ளி வியாபாரியிடம் மோசடி
சேலம், டிச.24- 55 கிலோ வெள்ளி கட்டியை தராமல் இழுத்தடிப்பு செய்து வரும் நபரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட வெள்ளி வியாபாரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார். சேலம் செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் ‘ஸ்ரீ மகாலட்சுமி சில்வர்ஸ்’ என்ற பெயரில் வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ‘சுபம் சில்வர்’ உரி மையாளர் வேணுகோபாலிடம் கடந்த மூன்று ஆண்டு களாக வெள்ளி கட்டிகளை வாங்கி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளி கட்டிகள் வாங்குவதற்காக வேணுகோபாலிடம் சந்தோஷ் குமார் ரூ.1.76 கோடி வழங்கியுள்ளார். அதற்கு ஈடாக வேணுகோபால் ரூ.91.66 லட்சம் மதிப்புள்ள வெள்ளியை மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.83.50 லட்சம் மதிப் புள்ள சுமார் 55 கிலோ வெள்ளி கட்டிகளை வழங்காமல் கடந்த மூன்று மாதங்களாக இழுத்தடித்து வந்துள் ளார். இதுகுறித்து சந்தோஷ் குமார் நேரில் கேட்டபோது, “வெள்ளி விலை ஏறியுள்ளதால் தற்போது தர முடி யாது” எனக்கூறி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் குமார், பணத்தை ஏமாற்றி மிரட்டல் விடுக்கும் வேணுகோபால் மீது நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத்தரக் கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சட்டவிரோத மது விற்பனை: போராட்டத்தால் 2 பேர் கைது
ஈரோடு, டிச.24- அம்மாபேட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி, செம்படாபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த மக்கள் பவானி - பூனாச்சி சாலையில் செம்படாபாளையம் அருகே பேருந்தை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனை வரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக செம்படா பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி (54), ஏ.கரளா மணியைச் சேர்ந்த கொளந்தசாமி (58) ஆகியோரை போலீசார் கைது செய்து, 10 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.