tamilnadu

img

சிலை மாயம், பாலியல் தொல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் கைது

மதுரை, ஜூலை 4 -   பாலியல், சிலை மாயம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணை யராக இருப்பவர் பச்சையப்பன். 28.6.2019 அன்று சதுரகிரியில் உண்டி யல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. அதற்காக பச்சையப்பன், சதுரகிரி சென்றிருந்தார்.  இங்குள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான தங்கும்அறை யில் பெண் ஊழியர்கள் தங்கியிருந்தனர். அங்கு யாருக்கும் தெரியாமல் பச்சை யப்பன் காண்காணிப்புக் கேமிராவை பொருத்தியுள்ளார். இந்தக் கேமிரா பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை தருவதற்காக வைக்கப் பட்டிருப்பதாக பெண் அதிகாரி ஒருவர்  மதுரை சரக காவல்துறைத் தலைவரிடம் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் பச்சையப்பனை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் புகாரில் கைது செய்யப் பட்ட பச்சையப்பன் கடந்த 2014-ஆம் ஆண்டு சதுரகிரிமலை மகாலிங்கம் கோவில் தக்காராகப் பணிபுரிந்த போது  கோரக்கர் சித்தரால் வடிவமைக்கப்பட்ட ஆயிரமாண்டு பழமையான விநாயகர் சிலையையும், அதன் வாகனமான எலி சிலையையும் காணவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென விருதுநகர் மாவட்டம் வத்தராயிருப்பு பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி கடந்த மாதம் 7-ஆம் தேதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார். இது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு  காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.