பணி ஓய்வு பெற்றபின் எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்கமாட்டேன்!
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதி
துதில்லி, மே 14 - இந்தியாவின் 52-ஆவது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் எனும் பூஷன் ராமகிருஷ்ண கவாய் புதன்கிழமை யன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், குடி யரசு தலைவர் திரவுபதி முர்மு பத விப் பிரமாணம் செய்து வைத்தார். பதவிப் பிரமாணத்துக்கு பின்னர் பேசிய கவாய், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பின்னர், எந்தவித அரசு பொறுப்புகளையும் ஏற்க மாட்டேன், எனத் தெரி வித்துக் கொள்கிறேன்; என் தந்தை யைப் போல எனக்கு எந்தவித அர சியல் ஈடுபாடும் இல்லை” எனக் கூறினார். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் பங்கு வகித்துள் ளார். தேர்தல் பத்திரம் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஐவர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கவாய் இடம்பெற்றிருந்தார். இந்த அமர்வுதான் தேர்தல் பத்தி ரம் சட்டவிரோதம் என்று தீர்ப் பளித்தது. பட்டியலினத்தவர் களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்த ஏழுபேர் கொண்ட அரசியல் சாசன அமர்விலும் கவாய் இடம்பெற்றிருந்தார். நாடு முழுக்க எந்த ஒரு கட்டிடமும் 15 நாட்கள் நோட்டீஸ் இல்லாமல் இடிக்கப்படக் கூடாது என்று புல்டோசர் தொடர்பான வழக்கில் உத்தரவிட்டார். உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் சட்டத்தை பின்பற்றாமல் புல்டோசர் அனுப்பும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்த தற்கு எதிரான மனுக்களில் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்தார். பல்வேறு பிரச்சனைகள் குறித்த அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பு கள் உட்பட சுமார் 300 தீர்ப்புகளை அவர் எழுதியுள்ளார். தற்போது புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் பி.ஆர். கவாய், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். நாட்டின் பவுத்த மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதியும் ஆவார். அவர் பதவி ஏற்றதும் வழக்கறிஞர்களை பார்த்து.. சட்டத்தை இயற்றிய அண்ணல் பி.ஆர் அம்பேத்கரை நினைவு கூறும் விதமாக ‘ஜெய்பீம்’ என்று முழக்கமிட்டார்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யாக, பி.ஆர். கவாய், நவம்பர் 23 வரை 6 மாத காலத்திற்கு பதவி வகிப்பார்.