tamilnadu

img

“இராமநாதபுரத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்” பாஜகவின் நிர்ப்பந்தத்தால் இடமாறுதல் செய்யப்பட்ட காவல்கண்காணிப்பாளர் வருண்குமார் ட்விட்...

மதுரை:
அண்மையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் வருண்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். 

இந்தநிலையில், சென்னை தானியங்கிமற்றும் கணினி மயமாக்கல் பிரிவு கண்காணிப்பாளராக வருண்குமார் நியமிக்கப்பட்டுள் ளார். இந்தநிலையில்  வருண் குமார் அவரதுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், “மிக்க நன்றி இராமநாதபுரம். நான் நிறையகற்றுக்கொண்டேன். காவல் துறையில், என் வாழ்க்கையின் சிறந்த நாட்கள்  இவை. எனது  குடும்பம்இங்கு இருப்பதால் சென்னைக்குதிரும்பி வருவதில் மகிழ்ச்சி. அனைத்து நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.  இணைந்திருங்கள், தொடர்பில் இருங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் சமீபத்தில் சமூகவிரோதிகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை பாஜக தேசியச்செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா மதச்சாயம் பூசி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த கொள்கைக்கும் மதத்திற்கும் தொடர்பில்லை என வருண்குமார் மறுத்திருந்தார். இந்த நிலையில்  அரசியல் நிர்ப்பந்தம்,  அழுத்தங்களால் வருண்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.