நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவி
நாமக்கல், டிச.27- நான் முதல்வன் திட்டத்தில் வங்கி பணியாளராக தேர்ச்சி பெற்ற மாணவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அத்தனுார் 7 ஆவது கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (59), விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (49). இவர்களுக்கு நவீன் குமார் (26) என்ற மகனும், கமலி (22) என்ற மகளும் உள்ளனர். கமலி பள்ளி படிப்பை தனி யார் பள்ளியில் முடித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் கணித பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக, தனியார் பயிற்சி நிறுவனத்தில், இவர் வங்கி தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சேலத்தில் பயிற்சி யும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சமீ பத்தில் பாரத் ஸ்டேட் வங்கி தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளார். இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பி னர் ராஜேஷ்குமார் வெள்ளியன்று மாணவி யின் வீட்டிற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர் ஆர்.எம்.துரைசாமி, அத்தனூர் பேரூராட்சித் துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
