tamilnadu

img

விலங்குகளின் நடத்தையை பாதிக்கும் மனிதச் சத்தங்கள் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

கொரோனா தொற்று காலத்தில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறை நடைமுறைக்கு வந்தபோது இணையதளத் தொடர்பின் மூலம் நீங்கள் அலுவலக கூட்டத்தில் பங்கேற்கும் சமயத்தில் உங்கள் பங்காளியின் அலைபேசி பேச்சு அல்லது கொட்டையை இயந்திரத்தில் அரைத்து காபி தயாரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டபோது உண்டான சத்தங்களால் நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டீர்கள்? அப்போது வீடுகளில் ஒலி மாசு அதிகரித்தது. ஆனால் மனிதர்கள் உருவாக்கும் சத்தங்கள் அவர்களை மட்டும் இல்லாமல் எல்லா வகையான விலங்குகளின் நடத்தையை பாதிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உருளையில் உணவு

மனித சத்தங்கள் மற்றும் மின்னணுக் கருவி களால் விலங்குகள் பெரிதும் பாதிப்படை கின்றன.  மனிதர்களின் எல்லைகள் நாளுக்குநாள்  விரிவடைகின்றன. வன விலங்குகளின் வாழி டங்கள் ஆழமாக ஊடுருவப்படுகின்றன. இந்த சத்தங்கள் விலங்குகளின் கேட்கும் திறனை நேரடியாக பாதிப்பதுடன் அவற்றின் தகவல் தொடர்பையும் பாதிக்கிறது. எடுத்துக்காட்டு போக்குவரத்தால் ஏற்படும் ஒலி மாசு விலங்குகளின் அறிவாற்றல், இணை சேருதல் போன்ற நடத்தைப் பண்புகளில் குறுக்கீடு செய்கிறது. போக்குவரத்து ஒலிகள் விலங்குகளிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டறிய விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட ஜீப்ராஃபின்ச் (Zebra finch) என்ற சிறிய பாடும் பறவையின் அறி வாற்றலை ஆராய்ந்தனர். உணவு தேடும் பலவித மான இலக்குகள் வழங்கப்பட்டன. அமைதியான ஆய்வகச் சூழ்நிலை அல்லது  20 முதல் 30 மீட்டர் தொலைவில் கார்கள் ஓடும் சத்தங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டு ஜீப்ரா ஃபின்ச் பறவைகளின் நடத்தை ஆரா யப்பட்டது. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்  திறனை இந்த ஒலிகள் எவ்வாறு தடுக்கின்றன  என்பதை அறிய உணவுடன் கூடிய செங்குத்தாக  நிறுத்தி வைக்கப்பட்ட உருளைகள் பயன்படுத் தப்பட்டன. உள்ளுணர்வால் பறவைகள் பாதிக்கப்படு வதை மதிப்பிட அவை உணர்ச்சிவசப்படுகின்ற னவா அல்லது சுற்றிவந்து திறந்திருக்கும் உரு ளையின் வாய்ப்பகுதியை கண்டுபிடித்து அடை கின்றனவா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்த னர். உருளையின் மூடியை திறக்கும் பணி பறவை களுக்கு கொடுக்கப்பட்டது. உணவு தேடுதலில் முக்கியப்பங்கு வகிக்கும் அவற்றின் மோட்டார் திறன் மற்றும் பொருட்களை கையாளும் திறனை பரிசோதிக்க இந்த சோதனை நடத்தப்பட்டது. வெவ்வேறு நிறங்களுக்கு இடையில்  இருக்கும் வேறுபாட்டை பறவைகளின் திறனை கண்டறிய ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய உணவுடன் கூடிய வெவ்வேறு நிறமுள்ள மூடிகளை கொண்ட உருளைகள் இருக்கும் இடத்திற்கு அவை அழைத்துச்செல்லப்பட்டன. சில நிற மூடிகள் உள்ள உருளைகளில் மட்டுமே  உணவு வைக்கப்பட்டிருந்தது. உணவிருக்கும் இடம், பிரதேச எல்லை, இணை இருக்கும் இடம்  போன்றவற்றை தெரிந்துகொள்ளும் அவற்றின் ஆற்றலை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர்.

போக்குவரத்து சத்தங்களும்  நடத்தை மாற்றமும்

ஒருவரை பார்த்து மற்றொருவர் கற்றுக்  கொள்ளும் பறவைகளின் திறன் மதிப்பிடப் பட்டது. திரும்பத் திரும்பச் செய்து கற்றல் மூலம் சிறிய மர அமைப்பிற்குள் கட்டி வைக்கப்  பட்டிருந்த நூல் முடிச்சுகளை சில பறவைகள்  அவிழ்த்து உருளை மூடியைத் திறந்து உணவை  கண்டுபிடித்தன. இந்த இலக்கை அடைந்த மற்ற வற்றின் திறனும் ஆராயப்பட்டது. தொடர்பு டைய நிறங்களை உணரும் ஆற்றல் தவிர பறவை களின் பிற திறன்கள் போக்குவரத்து சத்தங்க ளால் பெரிதும் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இந்த ஆய்வுக்கட்டுரை ராயல் சங்கத்தின் புரோ சீடிங்ஸ் பி (Proceedings of the Royal Society B)  என்ற இதழில் வெளிவந்துள்ளது. “இந்த ஆய்வின் முடிவுகள் வியப்பூட்டுபவை. இந்த பற வைகள் அனைத்தும் எப்போதும் கலகலப்பாக பேசுபவை. காலனிகளாக வாழ்பவை. அரு காமையில் ஓடும் கார்களின் சத்தங்கள் கூட  இவற்றின் இயல்பான திறன்களை செயலி ழக்கச்செய்கிறது” என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆரிகன் பசிபிக் பல்கலைக்கழக துணைப் பேராசிரியருமான கிறிஸ்டோபர் டெம்பிள்டன் (Christopher Templeton) கூறுகிறார். மத்திய தரைக்கடலில் காணப்படும் நிலத்தில்  வாழும் பெண் கிரிக்கெட்கள் (Field crickets)  கிரில்லெஸ் பை மேக்குலாட்டஸ் (Gryllus bimaculatus) வெவ்வேறு நீரியல் மண்டலங்க ளில் எவ்வாறு இணைசேர்கின்றன என்பதை ஆராய்ந்த மற்றொரு ஆய்வுக்கட்டுரை நடத்தை  சூழலியல் (Behavioral Ecology) என்ற இதழில்  வெளிவந்துள்ளது. “பெண் இணையை கவர ஆண் உயிரினங்கள் தங்கள் இறக்கைகளை ஒன்றுடன் ஒன்று உரசுவதன் மூலம் இனிய  பாடல்களை பாடுகின்றன. இந்த பாடல்களின்  மூலம் பெண் உயிரினங்கள் ஆண் உயிரி னங்களின் உடற் தகுதியை கண்டறிகின்றன” என்று இது பற்றி ஆங்லியா ரஸ்கின் (Anglia  Ruskin) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட  படிப்பை மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் பல்க லைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான டாக்டர் ஆடம் பெண்ட்  (Dr Adam Bent) கூறுகிறார். வெவ்வேறு ஒலி களால் உருவாகும் தாக்கத்தை பரிசோதிக்க விஞ்ஞானிகள் பெண், ஆண் உயிரினங்களை இணை சேர்த்தனர். 

பரிணாம மாற்றமும்  இணையின் தேர்வும்

ஆண் கிரிக்கெட்டுகள் இறக்கைகளை உரசி  பாடாமல் இருக்க அவை க்ளிப் செய்து கட்டப் பட்டன. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் ஒலி கள், செயற்கை ஒலிகள், போக்குவரத்து ஒலி களை மட்டுமே பெண் இணையால் கேட்கமுடி யும். ஆண் உயிரினங்கள் பாட முயன்றன. அப்போது செயற்கையாக பாடல்கள் ஒலிக்கச் செய்யப்பட்டது. பெண் உயிரினங்கள் ஆரோக்கி யமான வாரிசுகளை பெற ஆண் கிரிக்கெட்டு கள் பாடும் உயர் தர பாடல்களை பயன்படுத்தியே  தேர்ந்தெடுக்கின்றன. ஒரு ஆணுடன் இணை  சேர்ந்த பின் பெண் கிரிக்கெட்டுகள் அடுத்த ஆண்  உயிரினத்துடன் இணை சேர தயாராகின்றன. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஆரோக்கி யமான வாரிசுகளைப் பெறமுடியும். போக்கு வரத்து சத்தங்கள் நிறைந்த சூழலில் ஆண் உயி ரினங்கள் இயல்பாக பாடல்களை பாடினாலும் அதனால் பயன் ஏற்படவில்லை. பெண் உயிரி னங்களால் பாடல்களின் உயர் மற்றும் குறை வான தரத்திற்கு இடையில் இருந்த நுண்ணிய வேறுபாட்டை கண்டறிய முடியவில்லை. தகுதி வாய்ந்த இணையைத் தேர்வு செய்வது உயிரினங்களின் பிற்கால ஆரோக்கியமான பாரம்பரியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதுவே ஒரு உயிரினத்தின் பரிணாமத்திற்கு காரணமாகிறது. பெண் உயிரினங்கள் இணையைத் தேர்வு செய்யும்போது ஏற்படும் மனித குறுக்கீடுகள் ஒரு உயிரினத்தின் பரிணா மத்தில் பெருவாரியான மாற்றங்களை ஏற்படுத்து கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூழல் சீர்கேடு, புவி வெப்ப உயர்வால் உயிரி னங்கள் அழிந்துவரும்நிலையில் இந்த ஆய்வு  முக்கியத்துவம் பெறுகிறது. ஒலி மாசு மனி தர்களை மட்டும் பாதிப்பதில்லை. கிரிக்கெட் போன்ற சிறியவை முதல் யானை, புலி, சிங்கம்  போன்ற பெரிய உயிரினங்கள் வரை அனைத்தை யும் பாதிக்கிறது. மாசற்ற உலகை மீட்டெடுத்தால்  மட்டுமே மனிதன் உட்பட எல்லா உயிரினங்க ளும் இங்கு நலமுடன் வாழ இயலும்.