இலவச பட்டா நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்
தமிழக அரசுக்கு பெ.சண்முகம் வேண்டுகோள்
தேனி, அக்.26 - தேனி அல்லிநகரத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை உரிய பட்டியலின மக்களிடம் இலவசமாக ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் நக ராட்சிக்குட்பட்ட பொட்டல்களத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், அப் போதைய முதல்வர் கருணாநிதியால் பட்டியலின மக்கள் 500 பேருக்கு 2 செண்டு வீதம் பட்டா வழங்கப்பட்டது.
வீடு கட்ட வசதி இல்லாத நிலையில் பட்டா பெற்ற மக்கள் குடிசை போட்டு குடியிருந்து வந்தனர். பின்னர் அந்த இடத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பட்டாதாரர் அனுமதியின்றி, வீடுகளை கட்டி முடித்தது. சம்பந்தப்பட்ட பட்டா பெற்ற நபர்கள் அணுகிய போது பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர். பாலபாரதி தலையீடு பாதிக்கப்பட்டவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று இதுகுறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, அன்று தேனி வந்திருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து, உரியவர்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி அந்த இடத்திற்கு நேரில் சென்று பட்டா பெற்ற நபர்களை சந்தித்து, கலைஞர் கையால் பட்டா வழங்கப்பட்ட இடத்தை அவர்களுக்கு வழங்கி வீடு களை ஒதுக்க வேண்டும் என அதிகாரி களை கேட்டுக் கொண்டார். வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட பட்டியலின மக்க ளுக்கு வீடு ஒதுக்கித் தராமல் இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில் கட்டப்பட்ட வீடு களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் மானி யம் போக ஒரு, வீட்டிற்கு ரூ.3.4 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் - காத்திருப்பு போராட்டம் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்ட இடத்தில், கட்டப்பட்ட வீடுகளை உரிய பட்டியலின மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் தொடர் போராட்டம் நடை பெற்று வருகிறது.
பெ.சண்முகம் ஆய்வு இந்நிலையில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஞாயிறன்று பொட்டல்களத்தில் உள்ள வீடுகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் பயனாளி களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், “எங்களுக்கு அரசு 2 செண்டு நிலம் கொடுத்தது. எங்கள் அனுமதி இல்லாமல் இந்த இடத்தில் வீடு கட்டியுள்ளனர். தற்போது அரசு மானி யம் போக ரூ 3.4 லட்சம் பணம் கட்டச் சொல்கிறார்கள். எங்களால் பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளோம்” என்ற னர்.
பின்னர் அவர்களிடம் பேசிய பெ.சண் முகம், “மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டதன் பேரில் மாவட்ட நிர்வாகம், மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். இது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாநில அரசு தலையிட்டு பட்டியலின பயனாளிகளுக்கு இலவசமாக வீடுகளை வழங்க வேண்டும். பட்டா பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள்.
இந்த மக்க ளுக்கு வீடு கிடைக்கும் வரை, மார்க்சிஸ்ட் கட்சி அவர்களுக்கு துணை நிற்கும்” என்றார். ஆய்வின் போது கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் எம்.இராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், டி.கண்ணன், ஜி.எம்.நாகராஜன், சு.வெண் மணி, கே.எஸ்.ஆறுமுகம், கே.ஆர்.லெனின், எம்.வி.முருகன், தாலுகா செயலா ளர் இ.தர்மர், மாவட்டக் குழு உறுப்பினர் கள் சத்யா, டி.நாகராஜ், டி.ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
