தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் பயிற்சி
பெரியகுளம், ஜன.16- திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை வட்டம் விராலிப்பட்டி கிராமத்தில் பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி -ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விளக்கினர். அங்கு கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு முறை களான சமூக வரைபடம் , கால வரைபடம், தினசரி நிகழ்வு வரைபடம், நடைபயண ஆய்வு போன்றவை குறித்து மக்களுடன் இணைந்து வரைபடம் வரைந்து அதனைப் பற்றி விளக்கினர். மேலும் ஊரின் விவசாய முறைகள் ,முக்கியப் பயிர்கள், மக்கள்தொகை போன்ற தகவல்களையும் சேகரித்தனர்.
