tamilnadu

img

கிறிஸ்துமஸுக்கு இந்து கடைகளை அலங்கரிக்கக்கூடாது, ‘கொண்டாட்டங்களைத்  தவிர்க்க வேண்டும்

கிறிஸ்துமஸுக்கு இந்து கடைகளை அலங்கரிக்கக்கூடாது, ‘கொண்டாட்டங்களைத்  தவிர்க்க வேண்டும்

விஎச்பி எச்சரிக்கை - மிரட்டல்! கிறிஸ்துமஸ் போன்ற மதம் சார்ந்த கொண்டாட்டங்களை இந்துக்கள் தவிர்க்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மிரட்டல் விடுத்துள்ளது. மதத்தையும் பாரம்பரி யத்தையும் பாதுகாக்க கடைக்காரர்கள், ஷாப்பிங் மால் நடத்துபவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொண்டாட் டத்தைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது. டிசம்பர் 13 அன்று விஎச்பியின் ‘இந்திர பஸ்தா மாகாண அமைச்சர்’ சுரேந்திர குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்து சமூகம் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து மதச் சடங்குகளில் பங்கேற்க வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘ஒழுங்கமைக்கப்பட்ட மத மாற்ற முயற்சிகள்’நீண்ட காலமாக நடந்து வருகின்றன. இந்துக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடைக்காரர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் கடைகளை ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ போன்ற அடை யாளங்களால் அலங்கரிக்கக்கூடாது. அது மதமாற்ற நடவடிக்கை என வெறுப்பை உமிழ்ந்துள்ளது. மதச்சார்பற்ற இந்திய மக்களி டையே பிரிவினையின் விதைகளைத் தூவும் விஎச்பிக்கு கண்டனங்கள்  எழுந்துள்ளது.