சென்னை, நவ.9- அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறி விப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோ ருக்குத் தேவைப்படும் தக வல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக் கப்படும். தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகள், 7 கல்வி யியல் கல்லூரிகள், 10 பொறி யியல் கல்லூரிகள், 52 தொழில்நுட்பக் கல்லூரி கள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்க ளில் மாணவ, மாணவி யருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமை யான ஒரு சூழலை ஏற்படுத் தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காக வும் மற்றும் இதர காரணங்க ளுக்காகவும் மேற்குறிப் பிட்டுள்ள கல்வி நிறுவனங்க ளுக்கு வருகை தரும் மாண வியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்த நிறு வனங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள், பட்டமேற் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங் கள், துறை அலுவலகங்க ளின் அமைவிடம், தனியார் களின் கோரிக்கை தொடர் பாக எந்த அலுவலரை அணு குவது. அலுவலக நடைமுறை கள், தனியர்களின் கோரி க்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அந்த கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவ ரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியா ளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும். இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும் என அமை ச்சர் கோவி. செழியன் கூறி யுள்ளார்.