tamilnadu

img

இன்று 18 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

இன்று 18 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கடலூர், தூத்துக்குடி, அக்.19 - திங்கட்கிழமை 18 மாவட்டங் களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கனமழை எச்சரிக்கையை தொ டர்ந்து கடலூர், தூத்துக்குடி, மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித் துள்ளது. அரபிக்கடலில் ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி நிலவி வரு கிறது. வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது  தொடர்பாக கடலோரப் பகுதி களில் மீன்வளத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வரு கின்றனர். தூத்துக்குடி புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் கட லுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்களால் தமிழகத்தில் அக்.22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத னால் மறு அறிவிப்பு வரும் வரை,  தூத்துக்குடியில் மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்கச் செல்ல  வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மீன்பிடி துறை முகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு அக்.22, 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக  கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால்,  ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல் பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சி புரம் போன்ற கடலோர மாவட்டங் களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்றும், இது  வடகிழக்கு பருவமழையை மேலும்  தீவிரமடையச் செய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதியை ஒட்டிய கேரள-கர்நாடக கடற்கரை யில் தற்போது நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத் தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டல மாகத் தீவிரமடைய வாய்ப்புள்ள தாகவும் இந்திய வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, அக்.19 - தென்கிழக்கு வங்கக் கடலில் அக்.21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்  அக்.23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என கணிக்கப்பட்ட நிலையில், செவ்வாயன்று (அக்.21)  காற்றுழுத்த தாழ்வு  பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த  48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடை யக் கூடும். திங்கட்கிழமை (அக்.20) தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,  ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவ கங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப் பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 18 மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.