உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்
தருமபுரி, அக்.19- உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறையினர் அபரா தம் விதித்தனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, காரம் தயா ரிப்பு கூடங்கள், விற்பனை நிலையங்களில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டம் முழுவதும் உணவுப் பாது காப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நேதாஜி புறவழிச் சாலை, பாரதிபுரம், ஆட்சியரகம், அன்னசாகரம், சத்தி ரம் மேல் தெரு மற்றும் ராஜா பேட்டை, செட்டிகரை, மதிகோன்பாளையம் பகுதிகளிலுள்ள தயாரிப்புக் கூடங்கள், மொத்த விற்பனை நிலையங்கள், பேக்கரிக ளில் ஆய்வு செய்தனர். அதில், சுகாதாரமின்மை குறை காணப்பட்ட செட்டிகரை பகுதியிலுள்ள பேக்கரிக்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், விதி முறைகள் பின்பற்றாத மூன்று கடை உரிமையாளர்க ளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3 ஆயிரம் உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.