பருவமழை தீவிரம்: வேகமாக நிரம்பி வரும் அணைகள்
சேலம், அக்.19- வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இத னால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேட் டூர் அணைக்கு ஞாயிறன்று நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன் படி, விநாடிக்கு 9,026 கனஅடியாக இருந்த நீர்வரத்து, விநாடிக்கு 10,374 கன அடியாக அதிகரித்துள் ளது. இதனால் அணையின் நீர்மட் டம் 118.55 அடியிலிருந்து 119 அடி யாக உயர்ந்துள்ளது. மேலும், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங் கள் வழியாக விநாடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால் வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக் கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 91.88 டிஎம்சியாக உள் ளது. இதேபோன்று, ஈரோட்டி லுள்ள பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து 3,500 கனஅடியில் இருந்து 11,667 கனஅடியாக அதிகரித்துள் ளது. அணையின் நீர் இருப்பு 28.49 டிஎம்சியாக உள்ளது. அணை யிலிருந்து விநாடிக்கு 1,400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.70 அடி யாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வ ரத்து காரணமாக, அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டவுள்ளது. அமராவதி அணை திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணை யின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன், ஆற்றின் வழியோர கிராமங்க ளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள் ளது. இந்த அணையிலிருந்து கடந்த மாதம் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களி லுள்ள பயிர்களை காப்பதற்காக வும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும் அணையிலி ருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இந் நிலையில், அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவி ரமடைந்துள்ளதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி என்ற அளவில் உயர்ந்துள் ளது விவசாயிகளுக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக கேரளாவி லுள்ள மூணாறு, தலையாறு, மறை யூர் மற்றும் வால்பாறை பகுதியில் மழை பெய்து, அணையின் பிர தான நீர்வரத்து ஆறான பாம்பாற் றின் மூலம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கோவையின் குடிநீர் ஆதாரம் கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், அதனையொட்டிய நீர் வழித்தடங் களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று காலை 8 மணி நிலவரப்படி சிறுவாணி அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், அடிவாரத்தில் 35 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந் தது. அணையின் நீர்த்தேக்கம் உய ரம் 50 அடியாகும். சனியன்று காலை நிலவரப்படி 36.74 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக் காக 9.6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக் கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்தனர்.