மதுரை:
ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்தபோது, விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த இருவரைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்துஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்தவர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ்.இவர்களை சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்து, போலி ஆதார் அட்டையைதயாரித்ததாக கேணிக்கரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது சென்னை புழல்சிறையில் உள்ளனர். இவர்கள் மீது இலங்கையிலும் வழக்குகள் உள்ளன.இந்த நிலையில் தங்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி இருவரும் உயர் நீதிமன்றமதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில்,” எங்களைத் தேவையில்லாமல் இந்தியாவில் வைத்திருக்க அவசியமில்லை. எங்கள் மீது பதிவு செய்த வழக்கை கேணிக்கரை காவல்துறையினர் திரும்பப் பெறவேண்டும். இருவரையும் இலங்கைக்கு திரும்பஅனுப்ப நடவடிக்க எடுக்க வேண்டும் என ஏற்கனவே தொடர்ந்த வழக்கொன்றில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றறவில்லை.
இதனால் நாங்கள் தேவையில்லாமல் தொடர்ந்து சிறையில் உள்ளோம். ஆகவே, எங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்”எனக் கூறியிருந்தனர்.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக இராமநாதபுரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படும் என அரசுத் தரப்பில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில்,” மனுதாரர்கள் மீதான வழக்கு முடிக்கப்பட்டு, மனுதாரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆள்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும் போது மனுதாரர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு வெள்ளியன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கியூ பிராஞ்ச் கண்காணிப்பாளர், புழல் சிறைகண்காணிப்பாளர், கேணிக்கரை காவல் ஆய்வாளர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்தஇருவரை தேட தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து, இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.