tamilnadu

img

மகத்தான வர்க்கப் போராளி

மகத்தான வர்க்கப் போராளி

நூற்றாண்டு காணும் தியாகி  என்.வெங்கடாசலம், தீண்டாமைக் கொடுமையை வர்க்கப் பிரச்சனையாகப் பார்த்த, அந்தப் பாதையில் மக்களைத் திரட்டிய அரிய தலைவர். அடித்தளத்தில் மிதியுண்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதியும் கூலி உயர்வும் ஒரே நேரத்தில் பெற்றுத் தந்த போராளி. வெண்டையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது 156 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நிலமும் குடியிருப்பும் அளித்தார். திருவள்ளுவர் நகர் அமைத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நிலங்கள் வழங்கினார்.  1977 செப்டம்பர் 21ஆம் தேதி செந்தலை கட்சிக் கிளை மாநாடு முடிந்து திரும்பிக் கொண்டிருந்த  தோழர்  என்.வி.யை சாதி ஆதிக்க சக்திகள் படுகொலை செய்தன. இடதுசாரி இயக்கத்திற்கு என்றென்றும் உத்வேகம் தரும் ஜீவன் தியாகி என்.வெங்கடாசலம்!