சென்னை,ஜன.31- குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசே உடனே அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம் மேளனம் (சிஐடியு) வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் வி.குமார், பொதுச் செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க மீட்டர் கட்டணத்தை அரசு தொழிற்சங்கங்க ளோடு அமர்ந்து பேசி அறிவிக்க வேண்டும் என்று, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், பல கட்ட போராட்டங்களை நடத்தியதோடு மனுக்களையும் அனுப்பினோம். நீதிமன்றத்திற்கும் சென்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப் பட வேண்டும் என்கிற தீர்ப்பையும் பெற்றோம்.
கடந்த ஆட்சியாளர்கள் நீதிமன்ற தீர்ப்பை கண்டுகொள்ளவில்லை. புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற ஆறு மாத காலத்திலிருந்து, இது வரை ஐந்துக்கும் மேற்பட்ட போராட் டங்களையும் பத்துக்கும் மேற்பட்ட மனுக்களையும், தமிழக முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து ஆணையா ளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்த தோடு, அமைச்சர் மற்றும் போக்கு வரத்து ஆணையரோடு பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. விரைவில் அறிவிப்பதாக கூறி, நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நிலையில் சில சங்கங்கள் ஆட்டோ சங்க கூட்டமைப்பு என்ற பெயரில், பிப்ரவரி 1 முதல் தாங்களே கட்டணத்தை தீர்மானித்து ஆட்டோக்கள் இயக்கப் போவதாக அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) விற்கு உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நிலையில் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து அப்படி இயக்கக் கூடாது. கட்டணம் கூடுதலாக தீர்மானித்து ஆட்டோக் கள் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மீட்டர் கட்டணம் அறிவிப்பதில், அரசின் மெத்தனப்போக்கே, இது போன்ற சூழல் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என்பதை சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டுகிறது. எனவே தமிழக அரசும் போக்குவரத்துத்துறையும் மேலும் காலதாமதப்படுத்தாமல், ஏற்கனவே ஆட்டோ சங்கங்களோடு கலந்து பேசிய அடிப்படையில், 1.5 கிலோமீட்டருக்கு 50 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 25 ரூபாயும் என நிர்ணயம் செய்து, உட னடியாக அரசாணை வெளியிட்டு, மீட்டர் கட்டணம் அமலாக்கத்தில் உள்ள குளறுபடியை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.