tamilnadu

img

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும்

சென்னை, அக். 18 - சென்னையில் ‘டிடி தமிழ்’  தொலைக்காட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று பிற்பகல் நடை பெற்ற ‘இந்தி மாதம்’ கொண் டாட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். விழாவின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப் பட்டது. அப்போது, வாழ்த்தி லுள்ள ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்’ எனும் வரிகள் பாடப்படவில்லை. இதில் ‘திராவிடம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளதால், திட்ட மிட்டே அந்த வரியை தவிர்த்து, ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ் த்தையே அவமதித்துள்ளார். அதுமட்டுமல்லாது, “கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க தொடர்முயற்சிகள் எடுக்கப்படு கின்றன. இந்தித் திணிப்பு என்று கூறி தமிழக மக்களை இந்தி கற்கவிடாமல் தடை செய் திருக்கின்றனர். நாட்டில் 23  மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் 3-வது மொழி அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு பிரிவினைவாத நோக்கம்” என்றும் ரவி பேசியுள்ளார். 

தமிழகத்தில் ‘இந்தி மாதம்’  கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும், தொலைக்காட்சி வாயிலாக இந்தி திணிப்பை ஏற்றுக் க்கொள்ள முடியாது என்று தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித் திருந்தன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். எனினும், இந்த எதிர்ப்பை யெல்லாம் அலட்சியப்படுத்தி யிருக்கும் ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்திலுள்ள வரி களையும் நீக்கி அராஜகத்தில் திமி ருடன் நடந்து கொண்டுள்ளார்.  இதற்கு தமது ‘எக்ஸ்’ பக்கத் தில் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், “திரா விடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக் காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதி யற்றவர். இந்தியைக் கொண்டா டும் போர்வையில் நாட்டின் ஒரு மைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்க ளையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமை யால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வு களையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடி யாகத் திரும்ப பெறவேண்டும்!” என்றும் வலியுறுத்தியுள்ளார்.  இதேபோல திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மநீம  தலைவர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆளுநரின் ஊடக ஆலோசகர் விளக்கம்

இதனிடையே, ஆளுநர் ரவியின் செயலுக்கு எதிர்ப்பு வலுக்கத் தொடங்கிய நிலை யில், ஆளுநரின் ஊடக ஆலோ சகர் விளக்கம் ஒன்றை அளித்துள் ளார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடு’ வார்த்தை நீக்கப்பட்டதில் ஆளு நருக்கு எந்தப் பங்கும் இல்லை. தமிழ் மற்றும் தமிழ்நாட்டு மக்க ளின் உணர்வுகள் மீது ஆளுநர் மிகுந்த மதிப்பு கொண்டவர்” என்று சமாளித்துள்ளார்.  ஆளுநரும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகவும் தெளிவாகவும் நான் பாடுவேன் என்பது அனைவருக்கும் தெரி யும் என்று கூறியுள்ளார்.

மன்னிப்புக் கேட்ட  டிடி தமிழ்

“தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட லின்போது, கவனச்சிதறல் காரண மாக பாடியவர் ஒரு வரியை தவற விட்டு விட்டார். கவனக்குறை வால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள் கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவ மதிக்கும் எண்ணம் பாடியவர்களி டம் இல்லை. வேண்டுமென்றே இதனை யாரும் செய்ய வில்லை” என்று டிடி தமிழ் தொலைக் காட்சி விளக்கம் அளித்துள்ளது.

“தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் திருத்த ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை!”

தமிழ்நாட்டில் செயல்படும் - டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில், எதிர்ப்பையும் மீறி இந்தி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளது மோடி அரசு. மற்ற தேசிய மொழிகளை புறக்கணித்து இந்தியை‌ மட்டும் கொண்டாடுவது, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றுள்ளார். அதில் ஒலிக்கப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்த்துவிட்டு பாடியுள்ளனர். தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்தவோ, மாற்றவோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் பல்வேறு மேடைகளில் தென்னக அரசியல் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தி வந்த ஆளுநர் இப்போது இந்த அவமதிப்புக்கும் வழிவகுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆளுநர் ஆர்.என். ரவியை, பதவிக்காலம் கடந்தும் அதே பொறுப்பில் தொடர்ந்து வைத்துள்ளது மோடி ஆட்சி - ஆர்.எஸ்.எஸ். கொள்கையை இதன் மூலம் திணிக்கலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். ஆளுநர் ரவியின் போக்கைக் கண்டிப்பதுடன், அவரை திரும்பப்‌பெற வேண்டுமென சி.பி.ஐ.(எம்) சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.